• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
வைகோ ராசி இல்லாதவர் என்ற பேச்சுக்கு முடிவு!

வைகோ ராசி இல்லாதவர் என்ற பேச்சுக்கு முடிவு!

தூத்துக்குடியில் துரை வைகோ பேட்டி

PradeepS S by PradeepS S
2021/05/07
in இந்தியா, தமிழகம்
76 0
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இனி வரும் தேர்தல்களில் ம.தி.மு.க. தனிச் சின்னத்தில் போட்டியிடும் என்றும் வைகோ ராசி இல்லாதவர் என்பதற்கு இந்தத் தேர்தலில் முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது எனவும் ம.தி.மு.க. பொதுச் செயலாளரான வைகோவின் மகன் துரை வைகோ கூறியுள்ளார்.

ம.தி.மு.க.வின் 28 ஆம் ஆண்டு நிறைவையிட்டு முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டி நகரில் கொடியேற்றும் விழா நடைபெற்றது. இதில் துரை வைகோ கலந்து கொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் 10 ஆண்டுகளாக சூழ்ந்திருந்த இருண்ட காலம் முடிவுக்கு வந்துள்ளது. உதித்தது உதய சூரியன். 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியால் பல சிக்கல்கள், பிரச்னைகள் தமிழகத்தைச் சூழ்ந்திருந்தன. கொரோனா முதல் அலை முடிந்து தற்போது 2 ஆவது அலை வந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் அஜாக்கிரதையால் 2ஆவது அலை மிகவும் அபாயகரமாக பரவுகிறது.

பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம் என்பதை போல், தமிழக அரசு பொறுப்பைத் தி.மு.க. ஏற்க உள்ளது. இந்த நேரத்தில் மதுரை, சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்கள், கிராமங்களில் கொரோனா 2 ஆவது அலை பாதிப்பு அதிகமாக உள்ளது. தினமும், மருத்துவமனையில் படுக்கைகள் கிடைக்கவில்லை, வென்டிலேட்டர் கிடைக்கவில்லை என பொதுமக்கள் கதறி அழுகின்றனர்.

இந்தப் பிரச்னை கையை மீறிச் சென்றுக்கொண்டுள்ளது. இதனால்தான் ம.தி.மு.க. தலைவர் வைகோ, கொரோனா 2 ஆவது அலையை எப்படிச் சமாளிப்பது என 5 முக்கியமான அம்சங்களை எழுதி, தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் வழங்கினார். இதில், முக்கியமானது 10 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலை அதிகமாக உள்ளது. அ.தி.மு.க. அரசு அந்தப் பணியிடங்களை நிரப்பவில்லை.

கொரோனா 2 ஆவது அலையைக் கட்டுப்படுத்துவதுதான் தனது முதல் பணி என ஸ்டாலினும் தெரிவித்துள்ளார். இது பெரிய சவால்தான். இந்தச் சவாலை ஸ்டாலின் சமாளிப்பார் என்ற நம்பிக்கை கூட்டணிக் கட்சிகளுக்கும் மக்களுக்கும் உள்ளது.

ம.தி.மு.க.வைப் பொறுத்தவரை குறுகிய காலகட்டத்தில் புதிய சின்னத்தைக் கொடுத்து அதனை தமிழகம் முழுவதும் கொண்டு செல்வதில் சில சிரமங்கள் இருந்ததால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். அடுத்த தேர்தலில் எங்களுக்குரிய தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.

சமூக வலைத்தளங்களில் வைகோவை ராசி இல்லாதவர் என்று குற்றஞ்சாட்டும் மூடநம்பிக்கை பரவலாக இருந்தது. அதற்கு இன்று முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது. கேரளாவில் இடதுசாரியும், மேற்கு வங்கத்தில் மம்தாவும், தமிழகத்தில் ஸ்டாலினும் வெற்றி பெற்றுள்ளனர். வைகோ ராசி இல்லாதவர் கிடையாது. கடந்த காலங்களில் அவர் கூட்டணி வைத்த கட்சிகள் வென்றுள்ளதை மறக்கக்கூடாது. இப்போது அது மீண்டும் நிரூபணமாகியுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

Related

Tags: TamilnaduTamilnadu Election 2021துரை வைகோம.தி.மு.க.மதிமுகவைகோ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அனைத்து சவால்களையும் முறியடித்தே தீருவோம்- அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில் பிரதமர் தெரிவிப்பு!

Next Post

கொரோனாவின் தீவிரம் இந்த மாத மத்தியில் குறைவடைய ஆரம்பிக்கும்

Related Posts

நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!
இந்தியா

நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

2026-06-18
தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!
இந்தியா

தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!

2026-06-18
தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் முதல் வரிசையில் தமிழ் தாய் வாழ்த்து!
ஆசிரியர் தெரிவு

தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் முதல் வரிசையில் தமிழ் தாய் வாழ்த்து!

2026-06-18
வாயை திறங்க CM: தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம்!
இந்தியா

வாயை திறங்க CM: தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம்!

2026-06-18
50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் அரசியலுக்கு வருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்போம்: ‘வீ தி லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை அதிரடி!
இந்தியா

50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் அரசியலுக்கு வருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்போம்: ‘வீ தி லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை அதிரடி!

2026-06-17
இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தற்கொலைப் படை ட்ரோன்களை உள்நாட்டிலேயே தயாரிக்க ஐஏஎப் திட்டம்!
இந்தியா

இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தற்கொலைப் படை ட்ரோன்களை உள்நாட்டிலேயே தயாரிக்க ஐஏஎப் திட்டம்!

2026-06-17
Next Post
கொரோனாவின் தீவிரம் இந்த மாத மத்தியில் குறைவடைய ஆரம்பிக்கும்

கொரோனாவின் தீவிரம் இந்த மாத மத்தியில் குறைவடைய ஆரம்பிக்கும்

டெஸ்ட் தரவரிசை; திமுத் கருணாரத்ன 11 ஆவது இடம்

டெஸ்ட் தரவரிசை; திமுத் கருணாரத்ன 11 ஆவது இடம்

ஐ.பி.எல். தொடரை இந்தியாவில் நடத்தியதில் பிழையில்லை

ஐ.பி.எல். தொடரை இந்தியாவில் நடத்தியதில் பிழையில்லை

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

0
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

0
ஜனாதிபதி கோட்டா அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்

கோட்டாபய ராஜபக்ஷவைத் தடுத்துக் கோரிய மனு மீதான மேலதிக பரிசீலனை ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

0
அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு!

அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு!

0
ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.