• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடன் உறுதிப்படுத்துங்கள்- சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை

தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடன் உறுதிப்படுத்துங்கள்- சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை

Yuganthini by Yuganthini
2021/09/18
in இலங்கை, பிரதான செய்திகள்
74 1
A A
0
41
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சிவசக்தி ஆனந்தன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் சிவசக்தி ஆனந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் தனது சகபாடிகளுடன் பிரவேசித்த விடயதானத்திற்கு பொறுப்பாகவிருந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் முழந்தாளிடச் செய்து இருவரை மிகமோசமாக அச்சுறுத்தியுள்ளார்.

அத்துடன் காலணிகளை நாக்கால் சுத்தம் செய்யுமாறு மனித விழுமியங்களுக்கு முற்றிலும் முரணான மிலேச்சத்தனமான செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பதாகவும் குரலற்றவர்களுக்கான குரல் அமைப்பின் தலைவர் கோமகன் குறிப்பிட்டிருக்கின்றார்.

இவ்விதமான செயற்பாடுகள் இந்த நாட்டில் சிறுபான்மையினத் தேசிய இனங்களை தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் எவ்வாறு நடத்துகின்றார்கள் என்பதை சர்வதேசத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

ஆகவேஇ இத்தகைய குரூரமான மனோநிலை கொண்டவர்களிடத்தில் நீதியை, நியாயத்தினை எதிர்பார்க்க முடியுமா என்பதும் அப்பட்டமாக வெளியாகியுள்ளது.

தற்போது இராஜாங்க அமைச்சர் சிறைச்சாலை விடயதானத்திலிருந்து மட்டும் பதவியில் இருந்து இராஜினாமாச் செய்துள்ளார். இந்த செயற்பாட்டை அரசாங்கம் குறித்த விடயத்திற்கான பொறுப்புக்கூறலாக படம் காட்டுவதற்கு முயற்சிக்கின்றது.

மேலும்,சிறைச்சாலை நிருவாகம் இவ்விதமான சம்பவம் ஒன்று நடைபெறவில்லை என்கிறது. இராஜாங்க அமைச்சர் சிறைக்குச் சென்றேன் மதுபோதையில்லை என்று வாக்குமூலம் கூறுகின்றார்.

இந்த நிலையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மிகுந்த பாதுகாப்பு அச்சத்திற்கு உள்ளாகியிருப்பதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறிருக்கையில், மிக சொற்பமான எண்ணிக்கையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு திரைமறைவில் தீட்டப்படும் திட்டங்களால் ஆபத்துக்கள் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் வெகுவாகவே ஏற்பட்டுள்ளது.

இதனைவிட, அதிகாரத்திலுள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு எதிராக சாட்சியமளிக்கின்றபோது அவர்களின் பாதுகாப்பு நிச்சயம் கேள்விக்குறியாகும். சிறை அதிகாரிகளும் இந்த விடயத்தில் நியாயமாக நடந்துகொள்ளும் மனோநிலையில் இல்லை.

ஆகவே வேறெந்த காரணங்களை வைத்தும் தமிழ் அரசியல் கைதிகள் பழிவாங்கப்படுவதற்கும் வாய்ப்புக்கள் இல்லாமல் இல்லை. இதனால் அவர்களின் பாதுகாப்பை உடன் உறுதிப்படுத்த வேண்டும்.

அதன் முதற்கட்டமாக அவர்களை வடக்கு கிழக்கில் உள்ள சிறைச்சாலைகளுக்கு இடமாற்ற வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: சிவசக்தி ஆனந்தன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மேலும் நான்கு மில்லியன் டோஸ் சினோபோர்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

Next Post

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஜனாதிபதி அமெரிக்கா பயணம்!

Related Posts

சவுதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!
இலங்கை

சவுதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!

2026-03-01
மத்திய கிழக்கில் உச்சகட்ட போர்: இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்த விரிவான அலசல்!
அமொிக்கா

மத்திய கிழக்கில் உச்சகட்ட போர்: இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்த விரிவான அலசல்!

2026-03-01
நுவரெலியா பிரதான நகரில்  எரிபொருளுக்காக நீண்ட வரிசை
இலங்கை

நுவரெலியா பிரதான நகரில் எரிபொருளுக்காக நீண்ட வரிசை

2026-03-01
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு
இலங்கை

கடனை திருப்பி கொடுக்கவரும் போர்வையில் துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு!

2026-03-01
பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக 29 ஆயிரத்து 069 கையெழுத்துக்கள் சேகரிப்பு!
இலங்கை

பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக 29 ஆயிரத்து 069 கையெழுத்துக்கள் சேகரிப்பு!

2026-03-01
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளது – மக்கள் பீதியடையத் தேவையில்லை – யாழ் மாவட்ட செயலர் அறிவிப்பு!
இலங்கை

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளது – மக்கள் பீதியடையத் தேவையில்லை – யாழ் மாவட்ட செயலர் அறிவிப்பு!

2026-03-01
Next Post
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட தயார் – கோட்டாபய ராஜபக்ஷ

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஜனாதிபதி அமெரிக்கா பயணம்!

இலங்கை- காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவை குறித்து பேச்சுவார்த்தை!

இலங்கை- காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவை குறித்து பேச்சுவார்த்தை!

சிறைச்சாலை கைதிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டு – இராஜாங்க அமைச்சர் இராஜினாமா

சிறைச்சாலை அச்சுறுத்தல் சம்பவம்: நடவடிக்கை எடுக்க சபாநகரை நாடும் தேர்தல்கள் ஆணைக்குழு

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
சவுதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!

சவுதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!

0
மத்திய கிழக்கில் உச்சகட்ட போர்: இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்த விரிவான அலசல்!

மத்திய கிழக்கில் உச்சகட்ட போர்: இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்த விரிவான அலசல்!

0
ஓமான் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து துலீப் மெண்டிஸ் விலகல்!

ஓமான் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து துலீப் மெண்டிஸ் விலகல்!

0
நுவரெலியா பிரதான நகரில்  எரிபொருளுக்காக நீண்ட வரிசை

நுவரெலியா பிரதான நகரில் எரிபொருளுக்காக நீண்ட வரிசை

0
அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.