வரக்காபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துல்கிரிய, மா ஓயாவுக்கு அருகிலிருந்து வாய்க்கு பிளாஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில், ஆணொருவரின் சடலம் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ளது.உடுகம, அரத்தன பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயது நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
வாய்க்கு பிளாஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் குறித்த சடலம் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், பன்னல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் இவரை கடந்த 10ஆம் திகதி முதல் காணவில்லை என்று அவரது மனைவி பன்னல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
பிரேதப் பரிசோதனைக்காக கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் குறித்த சடலம் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் மரணத்தில் சந்தேகம் உள்ளமையால், பொலிஸார் இது தொடர்பாக தீவிர விசாரணைகைளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.















