• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
உயர்நிலைக் கல்வி முறைமையில் சீர்த்திருத்தங்கள் பல அவசியமென ஜனாதிபதி தெரிவிப்பு

உயர்நிலைக் கல்வி முறைமையில் சீர்த்திருத்தங்கள் பல அவசியமென ஜனாதிபதி தெரிவிப்பு

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/12/09
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
76 1
A A
0
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

எமது நாட்டின் கல்வி முறைமை, தற்போதைய உலக நடைமுறைக்கு ஏற்ற வகையில் காணப்படவில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விசேடமாக மூன்றாம் நிலைக் கல்வி முறைமையில் பல்வேறு மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுகின்றதெனச் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 2021ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய ஜனாதிபதி, “பல்கலைக்கழக மாணவர்கள் எந்தப் பட்டப்படிப்பைத் தொடர்ந்தாலும், அவர்கள் அனைவரும் குறைந்தது தகவல் தொழில்நுட்பத்திலேனும் ஓரளவு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதோடு, தற்கால உலகை வெற்றிகொள்வதற்கு அவசியமான ஏனைய திறன்களையும் பெற்றிருக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

நமது பல்கலைக்கழகங்களால், ஏற்கெனவே பல்வேறு புதிய சீர்திருத்தங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர் தொகையைப் பத்தாயிரத்தால் அதிகரித்தமை தற்போதைய அரசாங்கம் அடைந்த பாரிய வெற்றியாகுமென்றும், அவ்வாறு அதிகரித்தாலும்கூட, உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தும், பல்கலைக்கழகக் கல்வியைப் பெறமுடியாத ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்னமும் இருக்கின்றனர் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதற்குக் காரணம், தகுதிபெறும் அனைத்து மாணவர்களுக்கும் இடமளிப்பதற்கு அரச பல்கலைக்கழக கட்டமைப்பில் போதுமான கொள்ளளவின்மையாகும்.

இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு எமது இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்தப் பல்கலைக்கழகம் அரச பல்கலைக்கழகமாக மாத்திரம் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உலகில் உள்ள அனைத்துச் சிறந்த பல்கலைக்கழகங்களும், அரச பல்கலைக்கழகங்கள் அல்ல என்றும் எடுத்துரைத்தார்.

ஆட்சேபனைகள் முட்டாள்தனமானவை என்பதோடு, பட்டப்படிப்புக்குப் பிறகு தொழிற்சந்தையில் வாய்ப்புகளை வழங்க முடியாத பல்கலைக்கழகங்களை மாணவர்கள் நாட மாட்டார்கள் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

“நாட்டில் மூன்றாம் நிலைக் கல்விக்கான சுதந்திரமான சூழலை ஏற்படுத்துவதன் மூலம், சர்வதேசத் தரம்வாய்ந்த பிராந்திய உயர்க்கல்வி நிறுவனங்களை இலங்கைக்குள் ஈர்க்க முடிவதோடு, அதன் மூலம் இந்நாட்டில் வழங்கப்படும் கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்த முடியும்.

“காலப்போக்கில், இது இலங்கையின் உயர்க்கல்வித் துறையை பொருளாதாரத்துக்குச் சாத்தியமான அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தருகின்ற வருமானம் ஈட்டக்கூடிய ஒரு வழியாக மாறும்” என்று நம்பிக்கைத் தெரிவித்த ஜனாதிபதி, நாடு விரைவாக அபிவிருத்தியடைந்து, எதிர்காலத்தில் வளமான நாடாக மாற வேண்டுமாயின், இலங்கைக்கு அவசியப்படுவது உயர்க்கல்வி கட்டமைப்பில் பரந்த மாற்றத்தை ஏற்படுத்துவதாகும் என்றும் குறிப்பிட்டார்.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 32ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

பாதுகாப்புக் கல்வி, முகாமைத்துவம், வர்த்தக மேலாண்மை, சட்டம், மருத்துவம், பொறியியல் மேம்பாட்டு முகாமைத்துவம், தொழில்நுட்ப விஞ்ஞானம், சமூகவியல், இணை சுகாதார விஞ்ஞானம் மற்றும் ஆக்கப்பூர்வமான சூழலியல் மற்றும் விண்வெளி அறிவியல் ஆகிய துறைகளை உள்ளடக்கிய வகையில் 1,408 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

இவர்களில் கலாநிதிப் பட்டதாரி ஒருவரும் பட்டப் பின்படிப்பு மற்றும் பட்டப் பின்படிப்பு டிப்ளோமா ஆகியோரும் அடங்குவர். இதன்போது, 1,180 பேர் தமது முதல் பட்டத்தைப் பெற்றுக்கொண்டனர்.

Related

Tags: மறுசீரமைப்புஜனாதிபதிஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரச ஊழியர்களின் ஆட்சேர்ப்பிற்கு இடமளிக்க முடியாது – அரசாங்கம் திட்டவட்டம்!

Next Post

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று!

Related Posts

கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையானார் சமன் ஏக்கநாயக்க!
இலங்கை

கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையானார் சமன் ஏக்கநாயக்க!

2026-01-28
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட “இ-கேட்”
இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட “இ-கேட்”

2026-01-28
காதர் மஸ்தான் தொடர்பில்  அவதுாறு பரப்பியவருக்கு  நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவு
இலங்கை

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் – 10 சந்தேகநபர்களுக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்!

2026-01-28
ஆயிரம் கோடி வசூலித்து ரன்வீர் சிங் நடித்த துரந்தர் சாதனை!
சினிமா

ஆயிரம் கோடி வசூலித்து ரன்வீர் சிங் நடித்த துரந்தர் சாதனை!

2026-01-28
இலங்கைக்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!
இலங்கை

இலங்கைக்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

2026-01-28
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் பரிசீலனைக்கு!
JUST IN

நீதிமன்றத்தில் ஆஜரானார் ரணில்!

2026-01-28
Next Post
2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை அடுத்த மாதம் நாடாளுமன்றில் முன்வைக்க தீர்மானம்

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று!

இலங்கை விமானங்கள் துருக்கியில் தரையிறங்கத் தடை!

சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு!

இந்த ஆண்டுக்குள் 5 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை

30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையானார் சமன் ஏக்கநாயக்க!

கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையானார் சமன் ஏக்கநாயக்க!

0
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட “இ-கேட்”

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட “இ-கேட்”

0
காதர் மஸ்தான் தொடர்பில்  அவதுாறு பரப்பியவருக்கு  நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவு

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் – 10 சந்தேகநபர்களுக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்!

0
ஆயிரம் கோடி வசூலித்து ரன்வீர் சிங் நடித்த துரந்தர் சாதனை!

ஆயிரம் கோடி வசூலித்து ரன்வீர் சிங் நடித்த துரந்தர் சாதனை!

0
ஈஸிஜெட் நிறுவனம் விமானப் பயணங்களில் பெரிய கைப்பை குறித்த விளம்பரம் நம்பகத்தன்மையற்றது – ஒழுங்குமுறை ஆணையம் குற்றச்சாட்டு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.