நாட்டில் மேலும் 75 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனையின் போதே இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் குறித்த தொற்றாளர்கள் பதிவான பிரதேசங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கமைய ஒமிக்ரொன் BA.1 வகை
கொழும்பு, அவிசாவளை, பொரலஸ்கமுவ, ஹோமாகம, கட்டுகொட, கொஸ்கம, மடபாத்த, பாதுக்க, பரகடுவ மற்றும் வெல்லம்பிட்டி
ஒமிக்ரொன் BA.2 வகை
அவிசாவளை, பதுளை, கொழும்பு, காலி, கொன்னாவல, கல்கிஸை, நுகேகொடை மற்றும் இந்தியாவில் இருந்து வந்த பயணிகள் 7 பேர்
ஒமிக்ரொன் B.1.1.529
அங்கொட, கொழும்பு, ருவான்வெல்ல, கல்கிஸை, நுகேகொடை, பாதுக்க மற்றும் அவிசாவளை. உள்ளிட்ட பகுதிகளிலேயே இந்த புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

















