ஐ.பி.எல். ரி-20 தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில், டெல்லி அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பையில் நடைபெற்ற இந்தப்போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களை குவித்தது.
இதையடுத்து 208 ஓட்டங்களைப் பெற்றால்; வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்கு களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.
இதையடுத்து, டெல்லி அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது டெல்லி அணியின் 5வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.



















