இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘பிரின்ஸ்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார். பிரின்ஸ் மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலான பிம்பிலிக்கி பிலாப்பி என்ற பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.
இதையும் படியுங்கள் ரசிகர்களுக்கு சிறப்பு போஸ்டரை பரிசளித்த வடிவேலு படக்குழு பிரின்ஸ் ‘பிரின்ஸ்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இப்படத்தின் புதிய வெளியிடு குறித்த தகவல் வெளியாகவுள்ளது.
அதன்படி இப்படம் ஒக்டோபர் 21 ஆம் திகதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


















