வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் இலங்கையர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் திட்டத்தை ஆரம்பிக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய ஜப்பான், கொரியா மற்றும் அவுஸ்திரேலியா தவிர்ந்த ஏனைய நாடுகளில் உள்ள புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த நிவாரணத் திட்டம் பயன்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டம்மானது புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் சுயதொழில் உதவிகளை வழங்கும் வேலைத்திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 5வருடங்களுக்கு மிகைப்படாமல் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள தொழிலாளர்களின் பிள்ளைகளும் பாடசாலை உபகரணங்களை பெற்றுக்கொள்ளும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
அத்துடன் வெளிநாடுகளில் இருந்து 5 வருடங்கள் பூர்த்தியாகாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 50,000 ரூபா பெறுமதியான சுயதொழில் உதவி வழங்கும் வேலைத்திட்டத்தையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.














