• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரசாங்க நிதி பற்றிய குழு அதிருப்தி

அரசாங்க நிதி பற்றிய குழு அதிருப்தி

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/26
in இலங்கை
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

நிதி அமைச்சின் அதிகாரிகள் குழு முன்னிலையில் அழைக்கப்பட்ட அதிகாரிகள் சமூகமளிக்காமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ.டி சில்வா தலைமையிலான அரசாங்க நிதி பற்றிய குழு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட அமைச்சு தொடர்பான விடயங்கள் பாராளுமன்றக் குழுவில் கலந்துரையாடல்களுக்கு எடுக்கப்படும் போது அமைச்சுக்குத் தலைமைதாங்கும் பொறுப்புவாய்ந்த மற்றும் பாராளுமன்றத்துக்குப் பதிலளிக்க வேண்டிய அதிகாரிகள் சமுகமளித்திருக்க வேண்டும் என்பது குழுவின் நிலைப்பாடாக இருந்தது.

2003 ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க அரசிறை முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்தின் 10ஆம் பிரிவின் கீழ் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சினால் வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை நேற்றையதினம் (25) குழுவின் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.

2023 ஜூன் இறுதி வரையான அரசிறை நிலைமையை நிதி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்தனர்.

இந்த அறிக்கைக்கு அமைய வரவுசெலவுத்திட்டத்தின் முதன்மை இருப்பு 0.1% மிகையைக்காண்பித்துள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான சேர் பெறுமதி வரியின் அதிகரிப்புக் காரணமாக ஆண்டுக்கான வருமான சேகரிப்பு 41.9% இனால் அதாவது 1,317 பில்லியனாக அதிகரித்துள்ளது.

முதல் காலாண்டுக்கான செலவீனம் 2,650 பில்லியன் என்றும் இது 40.5% இனாலான அதிகரிப்பாகும். உள்நாட்டு வட்டிச் செலவீனத்தில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதுடன், இது முதல் காலாண்டில் 51.6% இனால் அதாவது 1,273 பில்லியனாக அதிகரித்துள்ளது.

குழுவின் முன்னிலையில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் வழங்கிய புள்ளிவிபரங்களின் அடிப்படையில் அரசிறை நிலைமை, பொருளாதார செயலாற்றுகை மற்றும் செலவீனங்கள், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் செயலாற்றுகை தொடர்பில் குழுவின் உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

blank

2023ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் 11.5 வீத சுருக்கம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்கள் கவனம் செலுத்தினர். இவ்வாறான நிலைமைக்கான காரணம் மற்றும் இதற்கான காரணத்தைக் கண்டறிந்து பொருளாதாரம் மேலும் கீழ்நோக்கிச் செல்லாதிருக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து குழுவின் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர்.

அத்துடன், ஜனாதிபதியின் 2048 நோக்கத்துக்கு அமைய வளர்ச்சியை அடைவதற்கு அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலைபேறான திட்டங்கள் குறித்தும் குழு மேலும் கேள்வியெழுப்பியது. அபிவிருத்தியடைந்த நாடு என்ற வளர்ச்சியை அடைவது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தாலும், ஒத்திசைவான மூலோபாயத் திட்டமொன்று இருக்கவில்லைஎன்பது இதன்போது புலப்பட்டது.

இந்தக் கேள்விகளுக்கு வருகை தந்திருந்த அதிகாரிகளால் வழங்கப்பட்ட பதில்கள் தெளிவற்றதாகவும்,செயலூக்கமற்றவையாகவும் காணப்பட்டன என்பது குழுவின் நிலைப்பாடாக இருந்தது. பணவீக்கம் மற்றும் வரிக் கொள்கை மாற்றங்களால் வரிகள் அதிகரிக்கின்றமை குறித்தும் குழு கேள்வியெழுப்பியது.

குழு முன்னிலையில் ஆஜராகும்போது தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களுடன் தயாரான நிலையில் இருப்பது அவசியமானது என்றும், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் அதற்குரிய குழுவினருடன் சரியான பார்வையைக் கொண்டிருக்க வேண்டிய பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றும் அரசாங்க நிதி பற்றிய குழு வலியுறுத்தியது.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சம்பிக ரணவக்க, கௌரவ மதுர விதானகே, கௌரவ ஹர்ஷன ராகருணா, நாளக கொடஹேவா, மயந்த திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிளிநொச்சியில் கறுப்பு ஜூலையின் 40வது ஆண்டு நினைவேந்தல்!

Next Post

13வது திருத்தத்தினை அமுல்படுத்துவதற்கு தமிழ் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்!

Related Posts

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!
இலங்கை

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

2026-03-17
முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து
இலங்கை

முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

2026-03-17
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!
இலங்கை

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

2026-03-17
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

மோசடி கும்பல் மீது சுற்றிவளைப்பு: 134 வெளிநாட்டவர்கள் கைது

2026-03-17
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து  வௌியேறினார் கோட்டா!
இலங்கை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய , சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம்

2026-03-17
இரவு நேரத் தொழில் பயிற்சிக் கூடங்களை நிறுவத் திட்டம் – அநுர குமார
இலங்கை

ஜனாதிபதியின் விசேட உரை! இன்று இரவு 7.30 மணிக்கு

2026-03-17
Next Post
13வது திருத்தத்தினை அமுல்படுத்துவதற்கு தமிழ் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்!

13வது திருத்தத்தினை அமுல்படுத்துவதற்கு தமிழ் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்!

பிரித்தானியாவில் வாடகைக்கு வீடெடுப்பதில் சிக்கல்   

பிரித்தானியாவில் வாடகைக்கு வீடெடுப்பதில் சிக்கல்  

‘அஸ்வெசும‘ சர்ச்சைக்கு அலரி மாளிகையில் தீர்வு!

‘அஸ்வெசும‘ சர்ச்சைக்கு அலரி மாளிகையில் தீர்வு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01

ஜனாதிபதியின் விசேட ஊடக சந்திப்பு

0
அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

0
முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

0
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

0
கியூபெக் வரவு செலவுத் திட்டம்: தேர்தலுக்கு முந்தைய ‘நிதானமான’ நிதிநிலை அறிக்கை!

ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

2026-03-17
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

2026-03-17

Recent News

ஜனாதிபதியின் விசேட ஊடக சந்திப்பு

2026-03-17
அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

2026-03-17
முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

2026-03-17
ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

2026-03-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.