பிலிப்பைன்சின் மணிலா நகரில் உள்ள ஆடைத்தொழிச்சாலையொன்றில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்து இடம்பெற்றபோது 18 பேர் அங்கு இருந்துள்ளனர் எனவும் அதில் மூவர் உயிர் தப்பியுள்ளனர் எனவும், 15 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



















