ஜீப் வண்டியொன்று பண்டாரவளையில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்தபோது கம்பளை தெல்பிடிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி சுமார் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது ஜீப் வண்டியில் 15 பேர் பயணம் செய்திருந்த நிலையில் அவர்களில் 10 பேர் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை பிரதேசத்தில் இடம்பெற்ற மரண வீட்டில் கலந்து கொண்டு திரும்பிய குழுவினர் பயணித்த ஜீப் வண்டியே இன்று அதிகாலை 4 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.














