ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவானது தொழிலதிபர் சி.டி.லெனவவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசியலமைப்பின் பிரகாரம் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தெளிவூட்டும் வரை, அடுத்த ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கு இடைகாலத் தடை உத்தரவினைப் பிறப்பிக்குமாறும் குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.















