இஸ்ரேலில் நிலவும் மோதல் சூழ்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு அவசரநிலையில் செயல்பட பல தொலைபேசி இலக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில், இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் .நிமல் பண்டாரவிடம் வினவிய போது, தற்போது சுமார் 11,000 இலங்கையர்கள் இஸ்ரேலில் பணிபுரிவதாகவும் அவர்களில் 70 வீதமானவர்கள் தாதியர்களாக கடமையாற்றுவதாகவும் தெரிவித்தார்.
எஞ்சிய 30% விவசாயம் மற்றும் நிர்மாணத்துறையில் பணிபுரிவதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.














