மன்னார் மடு அன்னையின் ஆவணி மாதத் திருவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது.
இன்று காலை 6.15 அளவில் மடு அன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
சிலாப மறைமாவட்ட ஆயர் விமல் சிறி ஜயசூரிய, மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டு திருப்பலியாக ஒப்புக் கொடுத்தனர்.















