சுகாதார, மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொல நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சீதா அரம்பேபொல, சுகாதார இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்து வரும் நிலையில், அவர் சுகாதார, மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை முன்னதாக பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சராக கடமையாற்றி வந்த கீதா குமாரசிங்க, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.














