• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ஜனாதிபதி அநுரகுமார ஏழு நாடுகளின் உயர்ஸ்தானிகர்களுடன் விசேட சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார ஏழு நாடுகளின் உயர்ஸ்தானிகர்களுடன் விசேட சந்திப்பு!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/10/02
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று ஏழு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் விசேட சந்திப்புக்களில் ஈடுபட்டார்.

அந்தவகையில், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பெட்ரிக், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இந்த விஜயம் ஒரு முக்கியமான முன்னெடுப்பாக அமைந்தது.

இந்தச் சந்திப்பில் உயர்ஸ்தானிகர் பெட்ரிக், ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெற்றிபெற்றமைக்காக வாழ்த்துத் தெரிவித்ததோடு, இலங்கையின் ஜனாதிபதியாக திசாநாயக்க ஆட்சியமைத்ததற்கு பிரித்தானிய அரசாங்கமும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமைத்துவத்திற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், சார்ள்ஸ் மன்னர் மற்றும் பிரித்தானிய பிரதமர் சேர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) ஆகியோரின் பிரத்தியேக வாழ்த்துச் செய்திகளையும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கையளித்தார்.

நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் தொடர்ச்சியான ஆதரவை வழங்குமென உறுதியளித்த உயர்ஸ்தானிகர், கல்வித்துறை உறவுகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

அதேபோல் சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கும் பிரித்தானிய அரசாங்கத்தின் உதவி கிட்டுமென உறுதியளித்தார்.

அத்துடன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸிற்கும் (Paul Stephens) இடையிலான சந்திப்பும் இன்று கொழும்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், இலங்கையுடனான தொடர்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்ள அர்ப்பணிப்பதாகவும் உறுதியளித்தார்.

சமுத்திர பாதுகாப்பு, எல்லை நிர்ணயம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இலங்கைக்கு, அவுஸ்திரேலியா தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கும் என்றும் இதன்போது உறுதியளிக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலியாவின் உதவி கிட்டும் என்றும், இலங்கைக்குள் நேரடி முதலீடுகளை ஊக்குவிக்க அவுஸ்திரேலியா விருப்பத்துடன் இருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

அதேபோல் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பலப்படுத்திக்கொள்ளும் தீர்மானமிக்க காரணியாக விளங்கும் பொருளாதார வெளிப்படைத்தன்மையை பாதுகாப்பதன் முக்கியத்தையும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் வலியுறுத்தினார்.

blank

மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ (Andres Marcelo Gonzales Gorrido) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்றும் இன்று நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால இராஜதந்திர தொடர்புகள் மற்றும் நட்புறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துத் தெரிவித்த கியூபா தூதுவர், ஜனாதிபதியின் தலைமைத்துவத்திற்கு பாராட்டு தெரிவித்ததோடு, இலங்கையுடனான ஒத்துழைப்புக்களை பலப்படுத்த கியூபா எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு, டெங்கு ஒழிப்புக்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு கியூபா அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு வழங்கப்படுமென இதன்போது உறுதியளிக்கப்பட்டது.

டெங்கு ஒழிப்புச் செயற்பாடுகளில் கியூபா பெற்றுள்ள வெற்றிகள் தொடர்பாக சுட்டிக்காட்டிய கியூபா தூதுவர், இலங்கைக்கு டெங்கு ஒழிப்புக்கு அவசியமாக பொதுச் சுகாதார வேலைத்திட்டங்கள் தொடர்பிலான நிபுணத்துவ அறிவைப் பகிர்ந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பதாகவும் அறிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வாகன விவகாரம் என் மீதான சேறு பூசும் நடவடிக்கை – ரோஸி சேனாநாயக்க!

Next Post

நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு – ரன்ஜித் மத்தும பண்டார!

Related Posts

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!
இஸ்ரேல்

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

2026-06-19
போலி நிறுவனங்கள் மூலம் அந்நியச் செலாவணி கடத்தப்படுவதைத் தடுக்கவே புதிய வர்த்தமானி!
இலங்கை

போலி நிறுவனங்கள் மூலம் அந்நியச் செலாவணி கடத்தப்படுவதைத் தடுக்கவே புதிய வர்த்தமானி!

2026-06-19
பிரதிச் சபாநாயகர் சமிந்த குலரத்னவின் இடைநீக்கத்திற்கு எதிரான ரிட் மனு ஒத்திவைப்பு!
இலங்கை

பிரதிச் சபாநாயகர் சமிந்த குலரத்னவின் இடைநீக்கத்திற்கு எதிரான ரிட் மனு ஒத்திவைப்பு!

2026-06-19
கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!
இலங்கை

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு அவசர நீர்விநியோகத் தடை !

2026-06-19
இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்; இலங்கை வரவேற்பு!
இலங்கை

ஈரான்-அமெரிக்க போர் நிறுத்தத்திற்கு இலங்கை வரவேற்பு!

2026-06-19
யாழிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 08 பேர் கைது !
இலங்கை

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டவர்களுக்கு தடுப்பு காவல்!

2026-06-19
Next Post
நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு – ரன்ஜித் மத்தும பண்டார!

நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு - ரன்ஜித் மத்தும பண்டார!

IMF விடயத்தில் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செய்ய வேண்டும்!

IMF விடயத்தில் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செய்ய வேண்டும்!

இந்திய – சீனத் தலைவா்கள் ஜனாதிபதி அனுரவுடன் விசேட சந்திப்பு!

இந்திய - சீனத் தலைவா்கள் ஜனாதிபதி அனுரவுடன் விசேட சந்திப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

0
போலி நிறுவனங்கள் மூலம் அந்நியச் செலாவணி கடத்தப்படுவதைத் தடுக்கவே புதிய வர்த்தமானி!

போலி நிறுவனங்கள் மூலம் அந்நியச் செலாவணி கடத்தப்படுவதைத் தடுக்கவே புதிய வர்த்தமானி!

0
பிரதிச் சபாநாயகர் சமிந்த குலரத்னவின் இடைநீக்கத்திற்கு எதிரான ரிட் மனு ஒத்திவைப்பு!

பிரதிச் சபாநாயகர் சமிந்த குலரத்னவின் இடைநீக்கத்திற்கு எதிரான ரிட் மனு ஒத்திவைப்பு!

0
கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு அவசர நீர்விநியோகத் தடை !

0
யாழிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 08 பேர் கைது !

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டவர்களுக்கு தடுப்பு காவல்!

0
லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

2026-06-19
போலி நிறுவனங்கள் மூலம் அந்நியச் செலாவணி கடத்தப்படுவதைத் தடுக்கவே புதிய வர்த்தமானி!

போலி நிறுவனங்கள் மூலம் அந்நியச் செலாவணி கடத்தப்படுவதைத் தடுக்கவே புதிய வர்த்தமானி!

2026-06-19
பிரதிச் சபாநாயகர் சமிந்த குலரத்னவின் இடைநீக்கத்திற்கு எதிரான ரிட் மனு ஒத்திவைப்பு!

பிரதிச் சபாநாயகர் சமிந்த குலரத்னவின் இடைநீக்கத்திற்கு எதிரான ரிட் மனு ஒத்திவைப்பு!

2026-06-19
கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு அவசர நீர்விநியோகத் தடை !

2026-06-19
இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்; இலங்கை வரவேற்பு!

ஈரான்-அமெரிக்க போர் நிறுத்தத்திற்கு இலங்கை வரவேற்பு!

2026-06-19

Recent News

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

2026-06-19
போலி நிறுவனங்கள் மூலம் அந்நியச் செலாவணி கடத்தப்படுவதைத் தடுக்கவே புதிய வர்த்தமானி!

போலி நிறுவனங்கள் மூலம் அந்நியச் செலாவணி கடத்தப்படுவதைத் தடுக்கவே புதிய வர்த்தமானி!

2026-06-19
பிரதிச் சபாநாயகர் சமிந்த குலரத்னவின் இடைநீக்கத்திற்கு எதிரான ரிட் மனு ஒத்திவைப்பு!

பிரதிச் சபாநாயகர் சமிந்த குலரத்னவின் இடைநீக்கத்திற்கு எதிரான ரிட் மனு ஒத்திவைப்பு!

2026-06-19
கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு அவசர நீர்விநியோகத் தடை !

2026-06-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.