• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
விசாரணைக்கு முன்னிலையாக யூன் சுக் யோலுக்கு சனி வரை காலக்கெடு!

விசாரணைக்கு முன்னிலையாக யூன் சுக் யோலுக்கு சனி வரை காலக்கெடு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/12/17
in ஆசிரியர் தெரிவு, உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் யோல் (Yoon Suk Yeol) தனது தோல்வியுற்ற இராணுவச் சட்ட முயற்சியை விசாரிக்க வார இறுதிக்குள் முன்னிலையாகுமாறு தென் கொரிய வழக்கறிஞர்கள் செவ்வாயன்று (17) உத்தரவிட்டனர்.

உத்தரவுக்கு இணங்கத் தவறினால் யூன் கைது செய்யப்படுவார் என்று எச்சரிக்கப்பட்டதாகவும் தென்கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமையன்று (14) நாடாளுமன்றத்தால் குற்றஞ்சாட்டப்பட்டு பதவி நீக்கப்பட்ட யூன், இராணுவச் சட்ட முயற்சி தோல்வியடைந்த சிறிது நேரத்திலேயே, கிளர்ச்சியின் குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இது குறித்து சட்டத்தரணிகள் மற்றும் காவல்துறை, பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழல் தடுப்பு புலனாய்வாளர்களின் கூட்டுக் குழு விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், யூனும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனையை சந்திக்க நேரிடும்.

சிக்கலுக்கு உள்ளான யூன் இந்த வாரம் இருமுறை விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (15) ஒரு செய்தி வெளியீட்டில், கிளர்ச்சி குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்க யூனை அழைத்ததாக அரசுத் தரப்பு வெளிப்படுத்தியது. எனினும் இதற்கு அவர் இணங்கத் தவறிவிட்டார்.

இப்போது, ​​வழக்கறிஞர்கள் விசாரணைக்காக எதிர்வரும் சனிக்கிழமைக்குள் முன்னிலையாகுமாறும், இணங்கத் தவறினால் பியைாணை பிறப்பிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

இதற்கிடையில், நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை (16) அவரது பதவி நீக்கத்தை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியது.

மேலும் அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவதை உறுதிசெய்ய ஆறு மாதங்கள் (180 நாட்கள்) வரை கால அவகாசம் உள்ளது.

நாடாளுமன்றத்தின் தீர்ப்பை நீதிமன்றம் உறுதி செய்தால், இரண்டு மாதங்களுக்குள் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தற்சமயம் இடைக்கால ஜனாதிபதியாக பிரதமர் ஹான் டக்-சூ பதவி வகித்து வருகிறார்.

அதேநேரம், விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி பயணத் தடையின் கீழ் இருக்கிறார்.

டிசம்பர் 3 அன்று, யூன் ஒரு இராணுவச் சட்ட ஆணையை வெளியிட்டார், இது குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடித்தாலும், பல ஆண்டுகளில் நாட்டை அதன் ஆழ்ந்த அரசியல் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.

இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பரவலான கண்டனத்தையும் வெகுஜன எதிர்ப்புகளையும் தூண்டியமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: South KoreaYoon Suk Yeolதென்கொரியாயூன் சுக்-யோல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம்!

Next Post

புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரம ரத்ன தெரிவு!

Related Posts

பத்தேகம முக்கொலைச் சம்பவம்; இரு சந்தேகநபர்களைத் தேடும் பொலிஸார்
இலங்கை

பத்தேகம முக்கொலைச் சம்பவம்; இரு சந்தேகநபர்களைத் தேடும் பொலிஸார்

2026-11-09
ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர புதிய பேச்சுவார்த்தை!
ஆசியா

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர புதிய பேச்சுவார்த்தை!

2026-11-09
மின்சார வாகன விற்பனை இலக்கைத் தளர்த்த பிரித்தானியா திட்டம்
இங்கிலாந்து

மின்சார வாகன விற்பனை இலக்கைத் தளர்த்த பிரித்தானியா திட்டம்

2026-11-09
அத்தனகலு ஓயா தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
இலங்கை

அத்தனகலு ஓயா தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

2026-11-09
பங்களாதேஷுக்கு திரும்புவதற்கான முதல் அடியை எடுத்து வைத்த ஷேக் ஹசீனா!
உலகம்

பங்களாதேஷுக்கு திரும்புவதற்கான முதல் அடியை எடுத்து வைத்த ஷேக் ஹசீனா!

2026-11-09
அநுராதபுரம் போராட்டக் கைதியின் போதைப்பொருள் பயன்பாடு அம்பலம்!
இலங்கை

அநுராதபுரம் போராட்டக் கைதியின் போதைப்பொருள் பயன்பாடு அம்பலம்!

2026-11-09
Next Post
புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரம ரத்ன தெரிவு!

புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரம ரத்ன தெரிவு!

சீனாவின் ACWF துணைத் தலைவர், இலங்கைப் பிரதமருடன் சந்திப்பு!

சீனாவின் ACWF துணைத் தலைவர், இலங்கைப் பிரதமருடன் சந்திப்பு!

மக்களவையில் இன்று ‘ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா‘ தாக்கல்!

மக்களவையில் இன்று ‘ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா‘ தாக்கல்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பப்படும்

சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பப்படும்

0
பத்தேகம முக்கொலைச் சம்பவம்; இரு சந்தேகநபர்களைத் தேடும் பொலிஸார்

பத்தேகம முக்கொலைச் சம்பவம்; இரு சந்தேகநபர்களைத் தேடும் பொலிஸார்

0
ருவன்வெலிசாய சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட ஐந்து பிக்குகளுக்கு அழைப்பாணை!

ருவன்வெலிசாய சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட ஐந்து பிக்குகளுக்கு அழைப்பாணை!

0
ஆயிரக்கணக்கான மருத்துவப் பிரதிநிதிகள் கொழும்பில் ஒன்றுகூடத் திட்டம்!

ஆயிரக்கணக்கான மருத்துவப் பிரதிநிதிகள் கொழும்பில் ஒன்றுகூடத் திட்டம்!

0
திருமணத்திற்குப் பின் முதல் தீபாவளியைக் கொண்டாடிய ராஷ்மிகா – விஜய்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: