• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
டிஜிட்டல் மயமாக்கல் மூலமாக நகரமும் கிராமமும் ஒன்றிணைந்துள்ளது-ஜனாதிபதி!

டிஜிட்டல் மயமாக்கல் மூலமாக நகரமும் கிராமமும் ஒன்றிணைந்துள்ளது-ஜனாதிபதி!

Rahul by Rahul
2025/02/07
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தின் ஊடாக மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது

அதன்படி அரச டிஜிட்டல் கொடுப்பனவு தளமொன்றை உருவாக்குதல் (GovPay) ,ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்திற்கு கொண்டுச் செல்லல், தூதரகங்களிலிருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு (eBMD) சான்றிதழ்களை மென்பொருள் மூலம் பெற்றுக் கொள்ளல் என்பன மேற்கொள்ளப்படும்.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, ICTA நிறுவனம் மற்றும் லங்கா பே (Lanka Pay) ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன், கொடுப்பனவு முறையின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை உறுதி செய்ய மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

“Govpay” மென்பொருள் மூலம் ஆரம்ப கட்டமாக 16 அரசு நிறுவனங்களின் அனைத்து விதமான கொடுப்பனவுகளை செய்ய முடியும் என்பதுடன், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் மேலும் 30 அரச நிறுவனங்களில் இந்த மென்பொருளை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சகல அரச நிறுவனங்களையும் இதனுடன் இணைக்க எதிர்பார்க்கப்படுவதோடு ஏற்கெனவே 12 அரச மற்றும் தனியார் வங்கிகள் இதில் இணைந்துள்ளன.

இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தொழிநுட்பம் மற்றும் அறிவியலினால் ஏற்படும் முன்னேற்றங்கள் மக்களின் வாழ்வை இலகுவாக்குவதாகவும், இதன் மூலம் வினைத்திறனான, தரமான மற்றும் விரயம் குறைந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்

தொழிநுட்பத்தின் வெற்றிகளின் காரணமாகவே உலக வரலாற்றில் படிப்படியாக முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, மனித நாகரிகத்தை ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு நிலைக்கு உயர்த்த விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத்தின் புதிய கண்டுபிடிப்புகள் என்பன செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி நிதியத்தின் பணிகள் இதுவரை காலமும் கொழும்பில் இருந்தே செயற்படுவதாகவும், அதனால் தூர பிரதேசங்களில் உள்ள பிரஜைகள் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று முதல் பிரதேச செயலக மட்டத்தில் குறித்த முறைமையை செயற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நீண்ட காலத்துக்கு முன்னரே இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும், சரியான நேரத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படாமையினால் மக்களின் வாழ்க்கையும் நாட்டின் பொருளாதாரமும் பின்னடைந்து காணப்படுவதோடு, இன்றைய தினம் டிஜிட்டல் மயமாக்கல் மூலமாக நகரமும் கிராமமும் ஒன்றிணைந்துள்ளதால், கிராமிய வறுமையை ஒழிப்பதற்கும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் அவசியமானது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எமது நாட்டை தற்போதைய நிலையில் இருந்து புதிய நிலைக்கு உயர்த்தும் ஒரே வழி டிஜிட்டல் மயமாக்கல் எனவும், அதனால் மக்களின் தேவைகளை எந்தவிதமான அழுத்தம் மற்றும் அலைச்சல் இன்றி நிறைவேற்ற முடியும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

இயந்திரமயமான வாழ்க்கை முறையினால் எமது நாட்டு மக்கள் பண்பாட்டு ரீதியான வாழ்க்கையை இழந்துள்ளதாகவும், பண்பாட்டு வாழ்வை உருவாக்கிகொள்ள டிஜிட்டல் மயமாக்கல் வசதியாக அமையும் எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இத்திட்டம் வெற்றியடைய வேண்டும் என்றும், டிஜிட்டல் அடையாள அட்டை இதன் முக்கிய திருப்புமுனையாக அமையும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த மாற்றங்கள் மிக விரைவாக செய்யப்பட வேண்டும் என்றும், வெளிப்படைத்தன்மை, வினைத்திறன், கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையிலான இடைவௌியை குறைத்து டிஜிட்டல் மயமாக்கல் என்பன எமது நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தும் எனவும், அதற்காக அரசாங்கம் என்ற வகையில் நாம் கடுமையாக பாடுபடுகிறோம் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

இதில் பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்டமேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதிய செயலாளருமான ரொஷான் கமகே உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

blank blank blank blank blank blank

Related

Tags: DigitizationlkanewsPresidentsrilanakaupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா தொடர்பில் அறிவிப்பு!

Next Post

போதைப் பொருள் ஒழிப்பு சம்மந்தமான விழிப்புணர்வு மற்றும் தெளிவூட்டல் நிகழ்வு!

Related Posts

மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !
இலங்கை

மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

2026-06-19
வாக்காளருக்கு பணம் வழங்கிய வேட்பாளர் கையும் களவுமாக கைது
இலங்கை

லங்கா சால்ட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் கைது!

2026-06-19
நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!
இலங்கை

நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!

2026-06-19
ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!
இங்கிலாந்து

ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

2026-06-19
இறக்குமதிப் பணப்பரிமாற்றங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம்!
இலங்கை

இறக்குமதிப் பணப்பரிமாற்றங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம்!

2026-06-19
லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!
இஸ்ரேல்

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

2026-06-19
Next Post
போதைப் பொருள் ஒழிப்பு சம்மந்தமான விழிப்புணர்வு மற்றும் தெளிவூட்டல் நிகழ்வு!

போதைப் பொருள் ஒழிப்பு சம்மந்தமான விழிப்புணர்வு மற்றும் தெளிவூட்டல் நிகழ்வு!

ஒவ்வொரு நாளும் குறைந்தது 462 பேர் வீதி விபத்துகளில் இறப்பதாக அதிர்ச்சி தகவல்

ஒவ்வொரு நாளும் குறைந்தது 462 பேர் வீதி விபத்துகளில் இறப்பதாக அதிர்ச்சி தகவல்

தாய்லாந்து மற்றும் இலங்கைக்கிடையில் பௌத்த மத தொடர்புகளை வலுப்படுத்துவது பற்றி முன்மொழிவு

தாய்லாந்து மற்றும் இலங்கைக்கிடையில் பௌத்த மத தொடர்புகளை வலுப்படுத்துவது பற்றி முன்மொழிவு

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

0
பயணக் கட்டுப்பாடுகள் குறித்து ஃபிஃபாவிடம் முறைப்பாடு அளிக்கவுள்ள ஈரான்!

பயணக் கட்டுப்பாடுகள் குறித்து ஃபிஃபாவிடம் முறைப்பாடு அளிக்கவுள்ள ஈரான்!

0
வாக்காளருக்கு பணம் வழங்கிய வேட்பாளர் கையும் களவுமாக கைது

லங்கா சால்ட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் கைது!

0
நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!

நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!

0
ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

0
மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

2026-06-19
பயணக் கட்டுப்பாடுகள் குறித்து ஃபிஃபாவிடம் முறைப்பாடு அளிக்கவுள்ள ஈரான்!

பயணக் கட்டுப்பாடுகள் குறித்து ஃபிஃபாவிடம் முறைப்பாடு அளிக்கவுள்ள ஈரான்!

2026-06-19
வாக்காளருக்கு பணம் வழங்கிய வேட்பாளர் கையும் களவுமாக கைது

லங்கா சால்ட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் கைது!

2026-06-19
நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!

நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!

2026-06-19
ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

2026-06-19

Recent News

மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

2026-06-19
பயணக் கட்டுப்பாடுகள் குறித்து ஃபிஃபாவிடம் முறைப்பாடு அளிக்கவுள்ள ஈரான்!

பயணக் கட்டுப்பாடுகள் குறித்து ஃபிஃபாவிடம் முறைப்பாடு அளிக்கவுள்ள ஈரான்!

2026-06-19
வாக்காளருக்கு பணம் வழங்கிய வேட்பாளர் கையும் களவுமாக கைது

லங்கா சால்ட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் கைது!

2026-06-19
நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!

நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!

2026-06-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.