• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
சிவாயநம என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒரு போதும் இல்லை

சிவாயநம என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒரு போதும் இல்லை

Kavipriya S by Kavipriya S
2025/02/25
in ஆசிரியர் தெரிவு, ஆன்மீகம்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவராத்திரி தினத்தின் சிறப்பையும் அதனால் கிடைக்கும் நன்மைகளையும் பத்துக்கும் மேற்பட்ட புராணங்கள் தெளிவாக கூறியுள்ளன.

* சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல வகைப் பொருளை தருகிறது.

* சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்துச் செல்ல உதவும்.

* ‘சிவாயநம’ என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒரு போதும் இல்லை.

* ‘மகா’ என்றால் பாவத்தில் இருந்து விடுபடுவது என்றும் பொருள் படும். சிவராத்திரி விரதம் நிச்சயம் பெரிய பாவங்களைப்போக்கும்.

* எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவபூஜையால் மோட்சம் அடைந்துள்ளன.

* ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் தரவல்லது.

blank
* கருட புராணம், கந்தபுராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் சிவராத்திரி மகிமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

* கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் ஆகிய நறுமணப்பொருட்களை கலந்து தயாரிக்கும் சந்தனக்காப்பு அலங்காரம் தான் சிவபெருமானுக்கு மிகவும் பொருத்தமான வழிபாடாக கருதப்படுகிறது.

* சனிபிரதோஷ தினத்தன்று வரும் சிவராத்திரிக்கு ‘கவுரிசங்கரமண மகாசிவராத்திரி’ என்று பெயர். அந்த சிவராத்திரியில் கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.

* சிவபெருமானுக்கு சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் 3 கண்களாக உள்ளனர். சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினமே சிவராத்திரி என்று ஒரு கருத்து உண்டு.

* சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். எனவே எந்த அளவுக்கு ஒருவர் சிவ, சிவ…. என்று உச்சரிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் நன்மை பெறுவார்.

* சிவராத்திரி அன்று ஒவ்வொரு ஜாம பூஜையின்போது சிவபுராணத்தை வாசிப்பது மிகுந்த நன்மை தரும். சிவராத்திரி இரவில் திருமுறை ஓதுவது மிக சிறப்பானது.

* சிவராத்திரி தினத்தன்று 1.ஸ்ரீபவாய நம, 2.ஸ்ரீசர்வாய நம, 3.ஸ்ரீபசுபதயே நம, 4.ஸ்ரீருத்ராய நம, 5. ஸ்ரீஉக்ராய நம, 6.ஸ்ரீமகாதேவாய நம, 7.ஸ்ரீபீமாய நம, 8.ஸ்ரீஈசாராய நம என்ற 8 பெயர்களை சிவராத்திரியன்று ஜெபிப்பது நல்லது.

blank

* சிவராத்திரி தினத்தன்று கோவிலுக்கு சென்று சிவதரிசனம் செய்வது கூடுதல் பலன்கனைத் தரும். சிவராத்திரி தினத்தன்று சிவபுராணம், தேவாரம் மற்றும் திருமுறைகள் படிப்பது மிகவும் நல்லது.

* சிவராத்திரி தினத்தன்று நமது உடம்பில் உள்ள ஜீவ ஆத்மா எழும்பி பரமாத்மாவோடு இணைவதற்கு முயற்சி செய்யும். எனவே ஒவ்வொரு மாதம் சிவராத்திரி தினத்தன்றும் ஈசனை வழிபடுவது மிகுந்த புண்ணியத்தை தரும்.

* சிவராத்திரி தினத்தன்று நமது முதுகுத் தண்டு நேராகவே இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் ஜீவ சக்தியை எழுப்ப முடியும். எனவே தான் சிவராத்திரி தினத்தன்று தரையில் முதுகு படும்படி படுக்கக் கூடாது என்ற எண்ணத்தில்தான் சிவராத்திரி கண்விழிக்கச் சொல்கிறார்கள்.

* சிவராத்திரி தினத்தன்று மாலை சூரியன் மறைந்ததில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவ பூஜை செய்பவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.

* சிவராத்திரி தினத்தன்று விடிய, விடிய கண் விழித்து இருக்க இயலாதவர்கள் லிங்கோற்பவ காலமான இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையாவது கண் விழித்து தரிசனம் செய்வது நல்லது.

* சிவராத்திரி தினத்தன்று, தியாகராஜர் என்ற பெயரில் ஈசன் வீற்றிருக்கும தலங்களில் தரிசனம் செய்தால் பாவங்களில் இருந்து விடுபடலாம்.

* சிவராத்திரி தினத்திற்கு மிகப்பெரிய துதிகள், புராண பாடல்கள் பாட வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. ஓம் நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருந்தால் போதுமானது.

* சிவராத்திரி தினத்தின் சிறப்பையும் அதனால் கிடைக்கும் நன்மைகளையும் பத்துக்கும் மேற்பட்ட புராணங்கள் தெளிவாக கூறி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

* சிவராத்திரி நான்கு கால பூஜைகளில் விடியற்காலையில் நடைபெறும் நான்காம் கால பூஜையில் பங்கேற்று வழிபாடு செய்தால் எண்ணற்ற நல்ல பலன்களை பெற முடியும் புராதன நுல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* சிவராத்திரி பூஜையை வீட்டிலும் செய்யலாம். சிவபெருமான் படத்துக்கு பிச்சி பூ, செண்பக பூ, தாமரை பூ தூவி வழிபடலாம். வில்வம் தவறாமல் சூட்ட வேண்டும். மாதுளை பழத்தை நெய்வேத்தியமாக படைக்கலாம். இப்படி வழிபட்டால் அசுவதமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

* சிவராத்திரி விரதம் இருந்தால் விஷ்ணு சக்ராதயுத்தத்துடன் லட்சுமியையும், பிரம்மா சரஸ்வதியையும் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

* சிவராத்திரி விரதம் இருந்து வழிபட்டால் துளிஅளவு அன்பு உள்ளம் இல்லாதவர்களுக்கு கூட ஈசனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

* சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் மறுநாள் காலையில் அவசியம் அன்னதானம் செய்ய வேண்டும். அதுவும் சூரியன் உதித்த 2 1/2 மணி நேரத்திற்குள் செய்ய வேண்டும் என்பது ஐதீகமாகும்.

* சிவராத்திரி விரதம் மன அமைதியைத் தரும். சிவராத்திரியன்று 4 கால பூஜைக்கு தேவையான பொருட்களை சிவாலயங்களுக்கு பக்தர்கள் வாங்கிக் கொடுக்கலாம்.

* சிவராத்திரியன்று ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிவபெருமானுக்கு மனதில் அபிஷேகம் செய்து சிவனை வழிபடலாம்.

* சிவராத்திரியன்று இரண்டாம் கால பூஜை நேரத்தில் (இரவு 11 மணி முதல் 12.30 மணி வரை) கிரிவலம் வந்தால் மனதில் நினைத்த காரியம் வெகு விரைவில் முடியும். பிறவி இல்லா பேரின்பம் கிடைக்கும்.

blank

* சிவராத்திரியன்று கலச பூஜையுடன் லிங்கமும் வைத்து வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும்.

* சிவராத்திரியன்று திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மறுபிறவி கிடையாது.

* சிவனை அதிகாலையில் வணங்கினால் நோய்கள் தீரும். பகலில் வணங்கினால் விருப்பங்கள் நிறைவேறும். இரவில் வணங்கினால் மோட்சம் கிடைக்கும். மூன்று வேளையும் வணங்கினால் யாகங்கள் செய்வதால் உண்டாகும் பலன் கிடைக்கும்.

* சிவாலயங்களில் நந்தியை வழிபடும் போது தொடாமல் குனிந்து வணங்க வேண்டும்.

* சூரியன், முருகன், மன்மதன், இந்திரன், எமன், சந்திரன், குபேரன், அக்னி பகவான் ஆகியோர் முறைப்படி சிவராத்திரி விரதம் இருந்து பேறு பெற்றுள்ளனர்.

* தர்ப்பையில் லிங்கம் செய்து வழிபட்டால், அது சிவபூஜையின் ஆயிரம் மடங்கு பலனைத்தரும்.

* திங்கட்கிழமை வரும் சிவராத்திரிக்கு யோக சிவராத்திரி என்று பெயர்.

* திருவதிகை தலத்தில் உள்ள வீராட்டானேஸ்வரரை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால் ஆணவம், கர்மம், மாயை ஆகிய மூன்றும் நீங்கும்.

* திருவைகாவூர் ஈசனை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால், மரண பயம் நீங்கும்.

* பண்டரிபுரத்தில் உள்ள பாண்டு ரங்கன் ‘சங்கர – நாராயண’ வடிவம் என்பார்கள். பாண்டுரங்கன் தலையில் கிரீடத்துக்கு பதில் ‘பாண லிங்கம்’ இடம் பெற்றுள்ளது. சிவராத்திரி தினத்தன்று பாண்டுரங்கனுக்கு நிவேதனம் செய்வதில்லை. அவரும் அன்று சிவராத்திரி விரதம் இருப்பதாக சொல்கிறார்கள்.

* பொதுவாக பகல் பொழுதை சிவனுக்கும், இரவு பொழுதை அம்பிகைக்கும் உரியதாக சொல்வார்கள். ஆனால் இரவு முழுவதும் அம்பிகை விழித்திருந்து பூஜை செய்து அந்த இரவை சிவனுக்கு அர்ப்பணித்ததால் அது சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

* மகா சிவராத்திரி தினத்தன்று அபிஷேகத்துக்கு உரிய பொருட்களை வாங்கி ஆலயத்துக்கு கொடுப்பவர்கள் பரமானந்த நிலையை அடைவார்கள் என்பது ஐதீகம்.

* மகாசிவராத்திரி தினத்தன்று திருவண்ணாமலையில் லட்ச தீபம் ஏற்றப்படும். அதை காண்பது சிறப்பானது.

* யார் ஒருவர் சிவராத்திரி விரதத்தை மனப்பூர்வமாக கடைபிடிக்கிறார்களோ அவர்களது ஆயுள் நீடிக்கும். பிறவிப் பயனை மிக எளிதாக அடையலாம்.

* வில்வத்தில் லட்சுமி இருப்பது போல தாமரை மலரில் சிவபெருமான் வீற்றிருக்கிறார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2025 வரவு செலவுத் திட்டம்: 2 ஆம் வாசிப்பு பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றம்!

Next Post

கொங்கோவில் பரவி வரும் மர்ம நோய்: 53 பேர் உயிரிழப்பு

Related Posts

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

2026-03-16
பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு; கடற்படையின் விரிவான அறிக்கை!
ஆசிரியர் தெரிவு

பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு; கடற்படையின் விரிவான அறிக்கை!

2026-03-13
கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!
ஆசிரியர் தெரிவு

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!

2026-03-13
ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!
ஆசிரியர் தெரிவு

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

2026-03-13
ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கான ட்ரம்பின் அனுமதியுடன் எண்ணெய் விலை சரிவு!
ஆசிரியர் தெரிவு

ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கான ட்ரம்பின் அனுமதியுடன் எண்ணெய் விலை சரிவு!

2026-03-13
இந்திய பெருங்கடல் நாடுகளின் வலுவான பிராந்திய ஒத்துழைப்புக்கு ரணில் அழைப்பு!
ஆசிரியர் தெரிவு

இந்திய பெருங்கடல் நாடுகளின் வலுவான பிராந்திய ஒத்துழைப்புக்கு ரணில் அழைப்பு!

2026-03-13
Next Post
கொங்கோவில் பரவி வரும் மர்ம நோய்: 53 பேர் உயிரிழப்பு

கொங்கோவில் பரவி வரும் மர்ம நோய்: 53 பேர் உயிரிழப்பு

ஒருமித்த மனங்களுடன் நாம் தேர்ந்தெடுத்த பாதையை மென்மேலும் ஔிரச் செய்ய வேண்டும்-ஜனாதிபதி!

ஒருமித்த மனங்களுடன் நாம் தேர்ந்தெடுத்த பாதையை மென்மேலும் ஔிரச் செய்ய வேண்டும்-ஜனாதிபதி!

பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!

சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!

0
கல்முனைக்குடி – 03 கிரீன் பீல்ட் பகுதியில் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராம திட்டம் அங்குரார்ப்பணம்!

கல்முனைக்குடி – 03 கிரீன் பீல்ட் பகுதியில் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராம திட்டம் அங்குரார்ப்பணம்!

0
நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

0
யாழ் எழுச்சி 2026- மக்கள் சந்தை

யாழ் எழுச்சி 2026- மக்கள் சந்தை

0
பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் – பிரதமர் 

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.