மகாலட்சுமி ஜெயந்தி. மகாலட்சுமியிடம் வேண்டிய வரங்களை பெற இன்றைய தினம் வரக்கூடிய வெள்ளிக்கிழமையை யாரும் தவறவிடக்கூடாது.
நாம் எல்லோருக்கும் புரியும்படி சொன்னால் இன்று மகாலட்சுமியின் ஜனன தினமாகும்.
எனவே, இன்று மகாலட்சு தாயாரிடம் ஆசீர்வாதம் வாங்கி என்ன வரம் கேட்டாலும் நமக்கு கிடைக்கும் என்து ஐதீகம்.
அதுவும் இல்லாமல் 14 ஆம் திகதி வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று காரடையான் நோன்பு இருக்கிறது.
தாலிக்கயிறு மாற்றுவதற்கு இந்த நாள் சிறப்பான நாள்.
இந்த நாளில் பெண்கள் தங்களுடைய கணவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயம்.
இந்த அற்புதமான நாளில் நாம் நம்முடைய வீட்டில் செய்யக்கூடிய பூஜையானது முழு பலனையும் கொடுக்கும்.
மகாலட்சுமியை இன்று வழிபடும் முறை
ஒரு தாமரை பூ வாங்கி வைத்து விடுங்கள். மகாலட்சுமி பிறந்த நாளன்று மகாலட்சுமிக்கு பிடித்த தாமரை பூ வாங்கி பூஜையறையில் வைப்பது மிகவும் நல்லது.
மகாலட்சுமிக்கு பிடித்தமான பசும்பாலில் செய்த பால் பாயாசம் நெய்வேதியம் வைத்து விட வேண்டும்.
ஏலக்காய் போட்டு இந்த நெய்வேத்தியம் தயார் செய்து விடுங்கள்.
பூஜை அறையை அலங்காரம் செய்து விளக்கு ஏற்றி வாசம் நிறைந்த ஊதுவத்திகள் ஏற்றி வைத்து விடுங்கள்.
மகாலட்சுமிக்கு முன்பாக ஒரு சின்ன கிண்ணத்தில் ஒரு நட்சத்திர சோம்பு, அதாவது அன்னாச்சி பூ போட்டு அதில் கொஞ்சம் பச்சை கற்பூரம், ஒரு நெல்லிக்காயும் போட்டு மகாலட்சுமி பாதத்தில் வைத்து விட வேண்டும்.
உங்களுடைய வீட்டில் லட்சுமி அஷ்டோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் ஒலிக்க விட வேண்டும். பிறகு மகாலட்சுமியிடம் மனம் உருகி வேண்டி கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
பூஜை நிறைவடைந்த உடன் அந்த அன்னாசி பூவையும் பச்சைக் கற்பூரத்தையும் எடுத்து பீரோவில் பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால், உங்கள் வீட்டில் பணம் அதிகமாக சேர துவங்கிவிடும்.
வறுமை, கஷ்டம், கடன் தொல்லை எல்லாம் நீங்கும். பீரோவில் கட்டு கட்டாக பணமும் தங்க நகைகளும் மட்டும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பூஜை அறையில் நிவேதியமாக வைத்த நெல்லிக்காயை என்ன செய்வது அதை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பிரசாதமாக சாப்பிடலாம். இரண்டு பேருக்கு அந்த பால் பாயாசத்தை தானமாக கொடுக்கலாம்.
இவ்வளவுதான் வழிபாடு.
















