கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது
இன்னிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார்
வழமை போல இந்த வருடமும் இந்திய இலங்கை பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்கின்றனர் என்றும் இருநாட்டு பக்தர்கள் 8 ஆயிரம் பக்தர்களும் சிவகங்கை மறைமாவட்ட ஆயருடன் இணைந்து 100 குருக்களும் இந்த யாத்திரையில் கலந்து கொள்கின்றனர்,
அத்துடன் நெடுந்தீவு பிரதேச சபை யாழ் மாவட்ட செயலகம் கடற்படை இணைந்து இந்த ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதுடன் சனிக்கிழமை அதிகாலை 4:30 குறிகட்டுவானுக்கான பேருந்து சேவைகள் இடம் பெறும் குறிகாட்டுவானிலிருந்து படகு சேவைகள் இடம்பறவுள்ளது.
இதேவேளை குடிநீர், உணவு, மலசலகூடம் என அனைத்து வசதிகளும் என ஏற்பாடு செய்யபட்டுள்ளன.ஆகவே இந்த திருநாளின் ஊடாக ஆசி பெற அனைத்து பக்தர்களையும் அழைத்து நிற்கின்றோம் என்றும் இன்று மாலை 4 மணயளவில் திருச்செபமாலையும் அதனை தொடர்ந்து திருச்சிலுவை பாதை, திருப்பலி, கருணை ஆராதனையை தொடர்ந்து புனித அந்தோனியாருடைய திருச்சொரூப பவனி இடம்பெறும் தொடர்ந்து நாளை சனிக்கிழமை காலை 7 மணிக்கு திருநாள் திருப்பலி ஆயர் தலைமையில் ஒப்புகொடுக்கபடவுள்ளது
இது தவிர இலங்கையின் தென்பகுதி சகோதரர்களும் வர இருப்பதனால் சிங்கள மொழியிலும் சில வழிபாட்டு பகுதிகள் இடம்பெறவுள்ளன. சிங்கள மொழியில் மறையுரை ஆற்றுவதற்காக கொழும்பு மறைமாவட்டத்தில் இருந்து அருட்தந்தை சிஸ்வாண்டி குருஸ் அடிகளார் கலந்து கொள்ளவுள்ளார் .
மேலும் சனிக்கிழமை காலை 6 மணிக்கு திருச்செபமாலை இடம்பெறும் என்றும் 7 மணிக்கு திருநாள் திருப்பலி ஆரம்பமாகி சுமார் 9 மணிவரை திருநாள் திருப்பலி இடம்பெறுவதுடன் திருவிழா நிறைவு பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.