கண்டியில் அமைந்துள்ள தலதா மாளிகையில் நடைபெறும் “ஸ்ரீ தலதா வாழிபாடு” கண்காட்சியில் பங்கெடுக்கும் பக்தர்களுக்கு பொலிஸார் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிவிப்பில் பொலிஸார், ஸ்ரீ தலதா வாழிபாடு நிகழ்வின் போது அதில் கலந்து கொள்ளும் பொது மக்கள் தாங்கள் யாருடன் இருக்கிறீர்கள் என்பது குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவித்துள்ளனர்.
மேலும், இலங்கை பொலிஸாரின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், 081-2224660 அல்லது 081-2224661 என்ற தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஸ்ரீ தலதா வாழிபாட்டுக்கான பக்தர்களின் வருகை இன்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீ தலதா வாழிபாடு கடந்த ஏப்ரல் 18 அன்று தொடங்கப்பட்டது, நேற்று வரை ஏராளமான பக்தர்கள் அதில் கலந்து கொண்டுள்ளனர்.















