• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வட்டுக் கோட்டை பெண் மரணம்: 10 வருடங்களின் பின்னர் குற்றவாளிக்கு மரணதண்டனை விதிப்பு!

வட்டுக் கோட்டை பெண் மரணம்: 10 வருடங்களின் பின்னர் குற்றவாளிக்கு மரணதண்டனை விதிப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/04/24
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய பெண், கொழும்பில் கொலை செய்யப்பட்ட வழக்கில், 10 வருடங்களின் பின்னர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றவாளிக்கு  மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு கொழும்பு செட்டியார் தெருவில் அமைந்துள்ள விடுதியில் பெண்ணொருவரை கொலை செய்து, அவரது உடலை பயணப் பைக்குள் அடைத்து, பின்னர் அதனை கொழும்பு பெஸ்டியன் வீதியில் உள்ள பேருந்து நிறுத்தமொன்றில் விட்டுச் சென்றிருந்த கொலைச் சம்பவம் தொடர்பான தீர்ப்பு இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.

வழக்கின் சந்தேக நபர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது. சுமார் 10 வருடங்களாக இடம்பெற்று வந்த குறித்த வழக்கின் இறுதி தீர்ப்பினை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இன்று அறிவித்தார்.

சந்தேக நபரான பேட்ரிக் கிருஷ்ணராஜாவிக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கினை தாக்கல் செய்திருந்தது. நீண்ட விசாரணைக்குப் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே தீர்ப்பை அறிவித்து, குற்றச்சாட்டுகளில் பிரதிவாதி குற்றவாளி எனக் கண்டறிந்தார்.

தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜரான பிரதிவாதி, குற்றச்சாட்டுகளில் தான் நிரபராதி என்று குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர் மீது அரசாங்கத் தரப்பால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர் குறித்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, அதன்படி மரண தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

…..

இந்த சம்பவம் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்ததுடன் பெண்ணின் சடலம் 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டது.

யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய கார்த்திகா என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார். சடலமாக மீட்கப்பட்ட பெண் கடந்த 3 வருடங்களாக கொழும்பிலேயே வசித்து வந்திருந்தாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

செட்டியார் தெருவில் உள்ள தங்குமிடத்தில் வைத்தே கார்த்திகா கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் 3 அடி நீளம், 2 அடி அகலம் மற்றும் ஒரு அடி உயரமான கறுப்பு நிற பெட்டியொன்றை சிரமத்துக்கு மத்தியில் சந்தேக நபர் சுமந்துகொண்டு விடுதியில் இருந்து வெளியேறும் CCTV காட்சிகளும் வெளியிடப்பட்டிருந்தன.

சந்தேக நபர் பயணப் பெட்டியுடன் பஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்துக்கு சென்றமைக்கான ஆதாரங்களாக CCTV காட்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தன. குறித்த வழக்கின் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் சந்தேச நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

Related

Tags: யாழ்ப்பாணம்வட்டுக்கோட்டை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாகிஸ்தான் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் அறிவிப்பு!

Next Post

மூன்று மாகாணங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட வருகை

Related Posts

நிந்தவூர் பிரதேச சபை  கூட்டத்தில் வெளிநடப்பு
அம்பாறை

நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு

2026-04-23
கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!
இலங்கை

கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

2026-04-23
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
இலங்கை

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு விவகாரம்: சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு

2026-04-23
இலங்கையின் பணம் செலுத்துதலில் முறைகேடுகள் நடந்ததை உறுதிசெய்துள்ள அவுஸ்திரேலியா!
இலங்கை

இலங்கையின் பணம் செலுத்துதலில் முறைகேடுகள் நடந்ததை உறுதிசெய்துள்ள அவுஸ்திரேலியா!

2026-04-23
‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரில் பரவும் புதிய நிதி மோசடி
இலங்கை

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரில் பரவும் புதிய நிதி மோசடி

2026-04-23
இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை நோய்!
இலங்கை

இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை நோய்!

2026-04-23
Next Post
மூன்று மாகாணங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட வருகை

மூன்று மாகாணங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட வருகை

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பாகப் பகிரப்படும் போலிச்செய்தி!

பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பாகப் பகிரப்படும் போலிச்செய்தி!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!

தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!

0
நிந்தவூர் பிரதேச சபை  கூட்டத்தில் வெளிநடப்பு

நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு

0
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

0
திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

0
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.