2024 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று (04) நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியானது 37 ஓட்டங்களினால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியை தோற்கடித்தது.
இந்த தோல்வி LSG-யின் இந்த சீசனில் ஆறாவது தோல்வியாகும்.
இதன் மூலம் 11 ஆட்டங்களில் 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் ஏழாவது இடத்தில் அவர்கள் உள்ளனர்.
இன்னும் மூன்று லீக் ஆட்டங்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், பிளேஆஃப் பந்தயத்தில் உயிர்ப்புடன் இருக்க அவர்கள் இப்போது வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர்.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 54 ஆவது போட்டியானது தர்மசாலாவில் அமைந்துள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதான மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற LSG அணியானது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய PBKS அணியானது பிரப்சிம்ரன் சிங்கின் 48 பந்துகளில் 91 ஓட்டங்களின் உதவியுடன் 236/5 என்ற அபாரமான ஓட்டங்களை குவித்தது.
அணித் தலைவர் ஷ்ரேயாஸ் அய்யர் (45) மற்றும் ஷஷாங்க் சிங் (33*) ஆகியோருடன் இணைந்து LSG அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்த பிரப்சிம்ரன் சிங் முக்கியமான இணைப்பாட்டத்தை உருவாக்கினார்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய LSG அணியானது, ஆயுஷ் படோனி (74) மற்றும் அப்துல் சமத் (45) ஆகியோரின் தாமதமான நல்லதொரு துடுப்பாட்டம் இருந்த போதிலும், 20 ஓவர்களில் நிறைவில் அவர்களால் 7 விக்கெட் இழப்புக்கு 199 ஓட்டங்களை மாத்தரம் பெற முடிந்தது.
இந்த வெற்றியுடன் PBKS அணியானது 15 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.

இதேவேளை, நேற்று மாலை ஈடன் கார்டனில் நடந்த 53 வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராஜஸ்தான் ரோயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் 1 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணியானது ஆண்ட்ரே ரஸ்ஸலின் சிறப்பான துடுப்பாட்டத்துடன் 4 விக்கெட் இழப்புக்கு 206 ஓட்டங்களை எடுத்தது.
ரஸ்ஸல் 25 பந்துகளில் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களை எடுத்தார்.
அவர் தவிர, அஜிங்க்யா ரஹானே 41 ஓட்டங்களையும், குர்பாஸ் 35 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர்.
207 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பராக், மொயீன் அலி வீசிய ஒரு ஓவரில் ஐந்து சிக்ஸர்கள் உட்பட அற்புதமான தாக்குதலை நடத்தி தனது பாணியை வெளிப்படுத்தினார்.
ஆனால் அவரது ஆட்டமிழப்புடன், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மற்றொரு தோல்வியை நோக்கிச் சென்றது.
ஹர்ஷித் ராணா 95 ஓட்டங்களை எடுத்த பராக் விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலமாக கொல்கத்தா பிளே-ஆஃப்களுக்கான பந்தயத்தில் தங்களை உயிர்ப்புடன் வைத்திருந்தது.
அதே நேரத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸின் இந்த தோல்வி அவர்களை இக்கட்டான நிலைக்கு கொண்டு சேர்த்தது.


















