• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ஹென்ரிச் கிளாசென் சதம்; 110 ஓட்டத்தால் கொல்கத்தாவை வீழ்த்திய ஹைதராபாத்!

ஹென்ரிச் கிளாசென் சதம்; 110 ஓட்டத்தால் கொல்கத்தாவை வீழ்த்திய ஹைதராபாத்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/05/26
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (25) நடைபெற்றப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி 110 ஓட்டங்களினால் தோற்கடித்தது.

இதன் மூலம் SRH அணியானது 2025 ஐ.பி.எல். சீசனை வெற்றியுடன் நிறைவு செய்தது.

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 68 ஆவது போட்டியானது நேற்றிரவு 07.30 மணிக்கு டெல்லியில் அமைந்துள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற SRH அணியாது முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிராக 286 ஓட்டங்களை குவித்து இந்த சீசனில் சாதனை படைத்த SRH அணி, லீக் கட்டத்தை நிறைவு செய்ய இதேபோன்ற ஆதிக்க பேட்டிங்கை வெளிப்படுத்தியது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணியானது 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ஓட்டங்களை குவித்தது.

blank

KKR அணியின் மந்தமான பந்துவீச்சு அணியை மகத்தான இலக்கை நோக்கி அழைத்துச் செல்ல SRHக்கு மிகவும் உதவியாக இருந்தது.

ஹென்ரிச் கிளாசென் 37 பந்துகளில் அபார சதம் அடித்து KKR அணியின் பந்துவீச்சை சிதறடித்தார்.

அதே நேரத்தில் டிராவிஸ் ஹெட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 பந்துகளில் 76 ஓட்டங்களை எடுத்தார்.

இது தவிர ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அபிஷேக் சர்மா 16 பந்துகளில் 32 ஓட்டங்களையும், இஷான் கிஷான் 20 பந்துகளில் 29 ஓட்டங்களையும் எடுத்து இந்த இமாலய இலக்கில் SRH அணிக்காக தங்களின் பங்களிப்பினை வழங்கினர்.

பின்னர் 279 என்ற இமாலய இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அஜிங்க்யா ரஹானே தலைமையிலான அணியால் 18.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.

blank

அந்த அணி சார்பில் மணீஷ் பாண்டே மாத்திரம் அதிகபடியாக 37 ஓட்டங்களை எடுத்தார்.

SRH அணி சார்பில் பந்து வீச்சில் ஜெய்தேவ் உனத்கட், எஷான் மலிங்க மற்றும் ஹர்ஷ் துபே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் அதிகபடியாக வீழ்த்தினர்.

இந்த வெற்றியானது நடப்பு சீசனில் SRH பெற்றுக் கொண்ட ஆறாவது வெற்றியாகும்.

தற்சமயம் அவர்கள் புள்ளிகள் தரவரிசையில் 13 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தில் உள்ளனர்.

போட்டியின் ஆட்டநாயனாக ஹென்ரிச் கிளாசென் தெரிவானார்.

இதேவேளை, நேற்று மாலை நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த 2025 ஐ.பி.எல். தொடரின் மற்றொரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியானது 83 ஓட்டங்களால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னதாகவே தகுதி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றியானது நடப்பு ஐ.பி.எல். சீசனில் தோனி தலைமையிலான CSK அணி பெற்றுக் கொள்ளும் நான்காவது வெற்றியாகும்.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய CSK அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 230 ஓட்டங்களை குவித்தது.

இன்னிங்ஸில் டெவோன் கான்வே (52 ஓட்டம்) டெவால்ட் பிரெவிஸ் (57 ஓட்டம் ) ஆகியோர் அரைசதம் விளாசினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சுப்மன் கில் தலைமையிலான GT அணியானது 18.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி கண்டது.

ஆரம்ப வீரரான சாய் சுதர்சன் மாத்திரம் 28 பந்துகளில் 41 ஓட்டங்களை அதிகபடியாக எடுத்தார்.

பந்து வீச்சில் CSK அணி சார்பில் அன்ஷுல் காம்போஜ் மற்றும் நூர் அகமட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் அதிகபடியாக வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக டெவால்ட் பிரெவிஸ் தெரிவானார்.

Image

இந்தத் தோல்வியின் மூலம், புள்ளிகள் பட்டியலில் முதல் 2 இடங்களுக்குள் வரும் GT அணியின் நம்பிக்கை கடுமையாக கேள்விக்குறியாகியுள்ளது.

திங்கட்கிழமை மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதலில் வெற்றி பெறும் அணி, புள்ளிப்பட்டியலில் அவர்களை விட முன்னேறும்.

மேலும் இந்த சீசனின் கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தினால் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் இரண்டு இடங்களுக்குள் முன்னேறலாம்.

Related

Tags: IPL 2025KKRSRHகொல்கத்தா நைட் ரைடர்ஸ்சன்ரைசர்ஸ் ஹைதராபாத்ஹென்ரிச் கிளாசென்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாணந்துறை பகுதியில் துப்பாக்கி சூடு!

Next Post

காசாவில் இஸ்ரேல் நடத்திய அண்மைய தாக்குதலில் 30 பேர் உயிரிழப்பு!

Related Posts

சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
இலங்கை

சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

2026-06-26
ஐ.நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பணிகளுக்காக1,132 பேர் கொண்ட படையினர் குழு
இலங்கை

ஐ.நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பணிகளுக்காக1,132 பேர் கொண்ட படையினர் குழு

2026-06-26
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

லொகு பெட்டிக்கு நீதிமன்றம் உத்தரவு – ஜூலை 10 வரை விளக்கமறியல்

2026-06-26
எரிபொருள் விலையில் விரைவில் மக்களுக்கு நிவாரணம் – அரசாங்கம்
இலங்கை

எரிபொருள் விலையில் விரைவில் மக்களுக்கு நிவாரணம் – அரசாங்கம்

2026-06-26
காலிமுகத்திடல் பரதநாட்டிய சாதனை நிகழ்வில் பண மோசடி
இலங்கை

காலிமுகத்திடல் பரதநாட்டிய சாதனை நிகழ்வில் பண மோசடி

2026-06-26
போர் பதற்றத்தால் ஹீத்ரோவின் பயணிகள் செயற்பாடு 1.1% குறையும் என தகவல்!
இங்கிலாந்து

போர் பதற்றத்தால் ஹீத்ரோவின் பயணிகள் செயற்பாடு 1.1% குறையும் என தகவல்!

2026-06-26
Next Post
காசாவில் இஸ்ரேல் நடத்திய அண்மைய தாக்குதலில் 30 பேர் உயிரிழப்பு!

காசாவில் இஸ்ரேல் நடத்திய அண்மைய தாக்குதலில் 30 பேர் உயிரிழப்பு!

உக்ரேன் மீது ரஷ்யா வான் தாக்குதல்: புடின் மற்றும் செலன்ஸ்கியை விமர்சித்த ட்ரம்ப்

உக்ரேன் மீது ரஷ்யா வான் தாக்குதல்: புடின் மற்றும் செலன்ஸ்கியை விமர்சித்த ட்ரம்ப்

மான் கறி தயாரித்த 17 வயது சிறுமி பொலிஸாரால் கைது

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக்கூறி பணமோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

நாடு தழுவிய ரீதியில் அதிரடி வேட்டை! தேசிய செயற்திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது!

0
சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்

போதைப்பொருளுக்கு இடமில்லை – முக்கிய அறிவிப்பு

0
சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

0
பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

0
மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.