ஜூன் 4 புதன்கிழமை ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் 2025 இந்தியன் பிரீமியர் லீக் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது எம் சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய உயிர் இழப்பு மற்றும் காயங்களால் வார்த்தைகளால் பேச முடியாமல் திணறிப்போயிருப்பதாக விராட் கோலி கூறினார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவலை வெளியிட்டுள்ள RCB அணியின் கௌரவ ஆட்டத்தை வழிநடத்திய கோலி, இந்த துயர சம்பவத்துக்காக தனது வருத்தத்தையும் வெளியிட்டனர்.
“சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை, முற்றிலும் உடைந்துவிட்டேன்” என்று அதில் பதிவிட்டுள்ளார்.
“நிலைமை குறித்து அறிந்தவுடன், நாங்கள் உடனடியாக எங்கள் திட்டத்தை திருத்தி உள்ளூர் நிர்வாகத்தின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையைப் பின்பற்றினோம்,” என்று RCB ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வெற்றி பெற்ற அணியைப் பார்க்க முயன்றபோது மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர், 47 பேர் காயமடைந்தனர்.
35,000 பேர் அமரக்கூடிய மைதானத்திற்கு இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களை ஈர்த்த கொண்டாட்ட நிகழ்வு, வெளியே நடந்த சம்பவம் குறித்து ஏற்பாட்டாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் வெறும் 20 நிமிடங்களுக்குக் குறைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர் மற்றும் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் உட்பட அனைத்து RCB வீரர்களும் அவர்களின் துணை ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக விமான நிலையத்தில் அணியை வரவேற்ற கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரும் மாலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஐபிஎல் கிண்ணத்தை முதன்முறையாக அணியினர் அந்த இடத்திலேயே காட்சிப்படுத்தியபோது, மைதானத்திற்குள் இருந்த RCB ரசிகர்களிடம் விராட் கோலி உரையாற்றினார்.
எவ்வாறெனினும், நெரிசல் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகத் தொடங்கியபோதும், ஏற்பாட்டாளர்கள் எம். சின்னசாமி மைதானத்தில் நிகழ்வைத் தொடர்ந்தது ஏன் என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
கர்நாடக அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட முதற்கட்ட தகவல்களின்படி, மைதான வளாகத்திற்கு அருகில் உள்ள வடிகால் மீது வைக்கப்பட்டிருந்த தற்காலிக பலகை, அதன் மீது நின்றிருந்த மக்களின் எடையால் இடிந்து விழுந்தது.
இது திடீர் தூண்டியதுடன், கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்தது.
இதற்கிடையில், இந்த நிகழ்வின் ஏற்பாடு குறித்து விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 இலட்சம் இந்திய ரூபா இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது.















