பொலிஸாரைத் தாக்கிய மூவர் கைது! மூவர் தப்பியோட்டம்!

29
SHARES
966
VIEWS
மட்டக்களப்பு சின்ன ஊறணி பகுதியில் தொலைக்காட்சி திருடிய திருடனை கைது செய்ய சென்ற பொலிசார் மீது பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட குழுவினர் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்திய சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று பிற்பகல் இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் , இத்தாக்குதலில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தாக்குதலை மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த  திருடனின் தாயார் மனைவி ஆகிய இரு பெண்கள் மற்றும்  ஒரு ஆண் உட்பட 3 பேரை பொலிஸார்  கைது செய்துள்ளதாகவும் 3 பேர் தப்பி ஓடியுள்ளதாகவும்  மட்டு தலைமையக பொலிஸார்  தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Next Post
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist