களுத்துறை, பேருவளை, மொரகல்ல பகுதியில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில், காணாமல் போன இரண்டு மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.
பெந்தோட்டை கடற்கரையில் மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மீனவர்கள் நேற்று (28) காலை மீன்பிடிக்கச் சென்றிருந்த போது விபத்திற்கு முகம் கொடுத்திருந்துள்ளனர்.
இறந்தவர்கள் அளுத்கம பகுதியைச் சேர்ந்த நதுன் குமார மற்றும் அவரது சகோதரர் துமிந்த நதுன் குமார என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் காணாமல் போயிருந்த நிலையில், பிரதேசவாசிகள் படகுகள் மூலம் அவர்களைத் தேடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.













