இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள பூரி ஜெகநாதர் கோவிலின் தேர் திருவிழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதோடு 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.
சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டவேளையில் கூட்ட நெரிசல் அதிகரித்ததையடுத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நெரிசலில் சிக்கி இரு பெண்கள் உட்பட மூன்று பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் பக்தர்கள் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளனர் .
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.














