கடந்த வெள்ளிக்கிழமை (04) ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மத்திய அமெரிக்காவின், டெக்சாஸில் குறைந்தது 78 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த அனர்த்தத்தில் 41 பேர் காணாமல் போயுள்ளனர்.
இவற்றில் 28 சிறுவர்கள் உட்பட 68 இறப்புகள், கெர் கவுண்டியில் நிகழ்ந்தன.
அங்கு ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ பெண்கள் முகாம் வெள்ளத்தில் மூழ்கியது.
இறப்பு எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
அடுத்த 24-48 மணி நேரத்தில் இப்பகுதியில் மேலும் புயல்கள் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளம் ஏற்பட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர், அண்மைய டெக்சாஸ் வரலாற்றில் மிகப்பெரிய தேடல் மற்றும் மீட்பு முயற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.














