தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 240 கிலோ கிராம் நிறை கொண்ட 50 இலட்சம் இந்திய ரூபாய் பெறுமதியான கஞ்சாப் பொதிகளைத் தமிழகப் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் வசிக்கும் நாஞ்சில்ராஜ் என்பவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கடற்கரை தனது வாகனத்துடன் நின்று கொண்டிருந்த வேளை , அவர் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் குறித்த வாகத்தை சோதனை செய்த போதே தக்காளி பெட்டிகளுக்குப் பின்னால் 7 மூட்டைகளில் 240 கிலோ கிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையின் போது, இந்தக் கஞ்சாவை படகின் மூலம் இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.














