களுத்துறையின் பல பகுதிகளில் நாளை (05) 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.
அதன்படி, களுத்துறை நீர் வழங்கல் அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.
களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, நாகொட, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய மற்றும் வாதுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் NWSDB வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் இந்த காலகட்டத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.














