வடகொரிய எல்லையில் பிரச்சார நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட ஒலிபெருக்கிகளை தென் கொரிய இராணுவம் அகற்றிவருகிறது.
வடகொரியாவுடனான பதற்றங்களைக் குறைக்கும் நோக்கில், வடகொரிய எல்லையில் பிரச்சார நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட ஒலிபெருக்கிகளை தென் கொரிய இராணுவம் இன்று (4) அகற்றத் தொடங்கியதாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இதனை தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லீ கியுங்-ஹோ இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
லீ ஜே மியுங் தென் கொரியாவின் ஜனாதிபதியாக பதவியேற்றத்திலிருந்தே வடகொரியாவுடனான பதற்றமான உறவுகளை சரிசெய்யும் முயற்சிகளில் ஈடுபட்டார்.
இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜூன் 11 ஆம் திகதி சில பகுதிகளில் ஒலிபெருக்கி ஒலிபரப்புகளை நிறுத்தி வைக்க ஜனாதிபதி லீ ஜே மியுங் உத்தரவிட்ட இரண்டு மாதங்களுக்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இராணுவத்தின் தயார்நிலையைப் பாதிக்காமல் இருகொரிய நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்களைத் தணிக்க உதவும் ஒரு நடைமுறை நடவடிக்கையாகும் என அமைச்சரகம் தெரிவித்துள்ளது.


















