டொல்பின் குட்டி ஒன்று உயிரிழந்த நிலையில், தாய் டொல்பின் அதனை பிரிய மனம் இல்லாமல் தவிக்கும் தாய் டொல்பினின் பாச போராட்டம் பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அபுதாபி – அல் தப்ராவின் வடக்கு பகுதியில் சலாகா தீவில் இறந்த குட்டியை பிரிய மறுத்த தாய் டொல்பின் தொடர்பில் தகவல் ஒன்று வௌியாகியுள்ளது.
இந்த தீவு பகுதியில் உள்ள கடலில் டொல்பின்கள் அதிகளவில் உள்ளன.
சமீபத்தில் பெண் டால்பின் குட்டி ஒன்றை ஈன்றது.
இந்த குட்டி உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தது.
இதனால் அந்த தாய் டொல்பின் மிகவும் சோகமடைந்தது. எனினும் என்ன காரணத்துக்காக குட்டி உயிரிழந்தது என்பது குறித்த தகவல் தெரியவில்லை.
குட்டி உயிரிழந்த நிலையில், தாய் டொல்பின் அதனை பிரிய மனம் இல்லாமல் தவிக்கும் காணொளியே பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இறந்த குட்டியை விட்டு பிரிய மனமில்லாமல் தாய் டொல்பின் அதனை சுற்றி, சுற்றி வந்தது.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்ததுடன் அந்த காட்சியை அவர்கள் படமாகவும், வீடியோவாகவும் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் உயிரிழந்த குட்டியை விட்டு பிரிய முடியாமல் தவித்த தாய் டொல்பினின் பாசப் போராட்டம் குறித்து பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அபுதாபி கடல் பகுதியில் அதிகமான டால்பின்கள் உள்ள நிலையில் பொதுமக்கள் கடல் பகுதியில் செல்லும் போது பிளாஸ்டிக் உள்பட குப்பைகளை வீசிச் செல்வதை தவிர்க்க வேண்டும் என அபுதாபி சுற்றுச்சூழல் நிறுவனம் கூறியுள்ளது.


















