எகிப்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான மொஹமட் சாலா, தொழில்முறை காற்பந்து வீரர்கள் சங்கத்தின் ஆண்டின் சிறந்த வீரர் விருதினை மூன்றாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து ப்ரிமீயர் லீக்கில் விளையாடும் முன்னணி கழகங்களில் ஒன்று லிபர்பூல். இந்த அணிக்காக எகிப்தின் தலைசிறந்த வீரராக கருதப்படும் மொஹமட் சாலா விளையாடி வருகிறார்.
இவர் இந்த ஆண்டுக்கான நிபுணத்துவக் காற்பந்துச் சங்கமான PFA அவருக்கு சிறந்த விளையாட்டாளருக்கான விருதை வழங்கியது. இதன் காரணமாக, நடப்பாண்டிற்கான பாலன் டி ஓர் (Ballon d’Or) விருதுக்கும் முகமது சாலாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இவ் விருதை மூன்று முறை தட்டிச்சென்ற பெருமை சாலாவைச் சேரும். இதற்கு முன்னர் 2018ஆம் ஆண்டிலும் 2022ஆம் ஆண்டிலும் அவர் அந்த விருதை வென்றிருந்தார்.
இங்கிலிஷ் ப்ரிமீயர் லீக் கடந்த பருவகாலத்தில் 29 கோல்கள் பதிவு செய்திருந்தார். 3ஆவது முறை இந்த விருதை வெல்வதன் மூலம், இங்கிலிஷ் ப்ரீமியர் லீக்கில் தலைசிறந்த வீரர்களாக திகழ்ந்த மார்க் ஹியூக்ஸ், ஆலன் ஷியரெர், தியரி ஹென்ரி, ரொனால்டோ, காரத் பேலே, கெவின் டி ப்ரூயின் ஆகியோரின் சாதனையை சாலா முறியடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.















