• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கை அகதிகள் கைது விவகாரம்:  சட்டத்தில் மாற்றம் செய்யும் வாய்ப்பு!

இலங்கை அகதிகள் கைது விவகாரம்: சட்டத்தில் மாற்றம் செய்யும் வாய்ப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/21
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டிற்கு வருகை தரும்போது, கைது செய்யப்படும் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான இயலுமை அரசாங்கத்திடம்
காணப்படுவதாக சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை நாட்டிற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையம் ஏன் இடைநிறுத்தியது என்பதை அரசாங்கத்தினால் அறிய முடிவில்லை என்றும் பிமல் ரத்நாயக்க நேற்று சபையில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து  பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில் ” இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் நாம் பொறுப்பேற்போம். அவர்களுக்கு முழுமையாக ஒத்துழைப்புக்களை வழங்குவோம்.

கைது செய்யப்பட்ட இரண்டு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை, ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையம் ஏன் இடைநிறுத்தியது என்பதை எம்மால் அறியமுடியவில்லை.

கைது சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையத்துடன்; அமைச்சு மட்டத்தில் பேசுவோம். இவ்விடயம் குறித்து அமைச்சு மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.
இவ்வாறான கைதுகளை தடுக்க நீதியமைச்சுடன் கலந்துரையாடுவோம்.
தமிழர்கள் என்பதால் கைது செய்யப்படுவதாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள ராஜபக்ஷர்களின் ஒருசில அவதாரங்கள் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது
யுத்த சூழலின் போது எவரும் சட்டரீதியாக அகதிகளாகச் செல்வதில்லை.

உலக நாடுகளிலும் அவ்வாறான தன்மையே காணப்படும். தமது உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் எவ்வழியிலாவது நாட்டை விட்டுச் செல்வார்கள். இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகாலமாக அகதிகளாக வாழும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இன்றளவில் தீர்க்கப்படவில்லை.

ஒரு இலச்சத்து 10 ஆயிரம் இலங்கையர்கள் இந்தியாவில் அகதிகளாக இருந்ததாக குறிப்பிடப்பட்டது. இதில் 28ஆயிரத்து 500 பேர் இலங்கை குடியுரிமையும், இந்திய குடியுரிமையும் இல்லாத நிலையில் இருந்தார்கள். இவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவின் பங்குப்பற்றலுடன்
நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றை கொண்டு வந்தோம்.

ஒரு உறுப்பினரை தவிர ஏனைய சகல உறுப்பினர்களும் அந்த பிரேரணைக்கு ஆதரவளித்தார்கள். இதன் பின்னரே அந்த 28ஆயிரத்து 500 பேருக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டது.

இந்தியாவில் அகதிகளாக இருந்து இலங்கைக்கு திரும்பியவர்களை மீள்குடியமர்த்த தனிப்பட்ட முறையில் தலையீடு செய்துள்ளேன். கனகபுரம், பாரதிபுரம் ஆகிய பிரதேசங்களுக்கும் சென்று மீள்குடியேற்ற பணிகளை ஆராய்ந்துள்ளேன்.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் அகதிகளை கைது செய்வதாக தற்போது குறிப்பிடப்படுகிறது.

சின்னையா சிவலோகநாதன் என்பவர் நாடு திரும்பிய போது அவர் யாழ்.பலாலி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இவ்விடயத்தில் நான் தலையீடு செய்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்களுடன் சிவலோகநாதன் என்பவர் கைது செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்குப்  பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இலங்கைக்கு வரும் அகதிகளை கைது செய்வது அரசாங்கத்தின் கொள்கையல்ல,
அவ்வாறு கைது செய்வது தவறு. நாங்கள் நாட்டை நிர்வகிக்கிறோமே தவிர குடும்பத்தை நிர்வகிக்கவில்லை. அரச அதிகாரிகளில் ஒருசிலர் செய்யும் தவறுகளை அரசாங்கத்தின் தவறு என்று குறிப்பிடுவது முறையற்றது.

நாட்டுக்கு வரும் அகதிகள் இவ்வாறு கைது செய்யப்படுவது கவலைக்குரியது.
இருப்பினும் அதற்கு ஏதேனும் சட்ட காரணிகள் இருக்கும். இந்த சட்ட விடயங்களை திருத்துவதற்கான இயலுமை காணப்படுகிறது. தற்போது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் கடந்த காலங்களில் சட்ட திருத்தத்துக்கான எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

சட்டத்தில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் நீதியமைச்சுடன் கலந்துரையாடி இவ்வாறான கைதுகளை நிறுத்த நடவடிக்கை எடுப்போம்” இவ்வாறு பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related

Tags: அகதிகள்இந்தியாஇலங்கை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

PFA Awards 2025: சிறந்த வீரருக்கான விருதினை மூன்றாவது முறையாகவும் தட்டிச் சென்றார் சாலா!

Next Post

ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழல் மோசடி; பொது மக்களின் கருத்துக்களை கோரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு!

Related Posts

துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!
உலகம்

துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

2026-04-16
38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!
இலங்கை

சீன இணையவழி குற்றவாளிகள் குழு ஒன்று கைது!

2026-04-16
புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!
இலங்கை

புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

2026-04-16
பேருந்து, ரயில் சேவைகள் இன்று முதல் அதிகரிப்பு!
இலங்கை

பேருந்து, ரயில் சேவைகள் இன்று முதல் அதிகரிப்பு!

2026-04-16
பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!
ஆசிரியர் தெரிவு

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

2026-04-16
50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை
இலங்கை

50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை

2026-04-15
Next Post
ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழல் மோசடி; பொது மக்களின் கருத்துக்களை கோரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு!

ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழல் மோசடி; பொது மக்களின் கருத்துக்களை கோரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு!

உருகி வரும் மேற்கு அண்டார்டிக் பனிப்படலம்; எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்!

உருகி வரும் மேற்கு அண்டார்டிக் பனிப்படலம்; எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்!

தேவாலயங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது! -பொலிஸ்மா அதிபர்

பொது மக்களின் உதவியை நாடும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

0
துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

0
லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

0
38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

சீன இணையவழி குற்றவாளிகள் குழு ஒன்று கைது!

0
புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

0
ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

2026-04-16
துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

2026-04-16
லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

2026-04-16
38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

சீன இணையவழி குற்றவாளிகள் குழு ஒன்று கைது!

2026-04-16
புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

2026-04-16

Recent News

ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

2026-04-16
துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

2026-04-16
லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

2026-04-16
38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

சீன இணையவழி குற்றவாளிகள் குழு ஒன்று கைது!

2026-04-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.