திருகோணமலை முத்து நகர் பகுதியில் விவசாயிகளின் 800 ஏக்கர் நிலங்களை நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்குள் இப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று கடந்த 14 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் முன் நடைபெற்ற போராட்டத்தின் போது, அரசாங்கம் விவசாயிகளுக்கு உறுதியளித்தது.
இந்நிலையில் இன்று (27), குறித்த பகுதியில் சிலர் ஆக்கிரமிப்பு பணிகளை முன்னெடுத்துள்ளதாகவும், அது குறித்து விசாரிக்கச் சென்ற விவசாயிகளை அவர்கள் தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.















