மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தின் விரார் பகுதியில் அமைந்துள்ள நான்கு மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி புதன்கிழமை (27) இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விரார் பகுதியில் உள்ள நாரங்கி வீதியில் அமைந்துள்ள நான்கு மாடி ரமாபாய் அடுக்குமாடி குடியிருப்பின் பின்புறம், அதிகாலை 12.05 மணியளவில் அருகிலுள்ள ஒரு கட்டிடத்தின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் சில உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன.
ஏனையவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் தேடுதல் பணி இன்னும் தொடர்வதாக கூறியுள்ளனர்.
இந்தக் கட்டிடம் முதலில் 2008 மற்றும் 2009 க்கு இடையில் 54 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் நான்கு வர்த்தக நிலயைங்களுக்கா கட்டப்பட்டது.
இருப்பினும் அதன் சில பகுதிகள் 2012 இல் மாற்றியமைக்கப்பட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.


















