ராஜித சேனாரத்னவுக்கு எதிராகக் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறுத்த கோரி தாக்கல் செய்த திருத்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ராஜித சேனாரத்னவை கைதுசெய்ய பிறப்பித்த பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அவரது சட்டத்தரணிகள் தற்காலிக இடைக்கால தடை உத்தரவை கோரியுள்ளபோதும் அந்த உத்தரவை பிறப்பிக்காத மேல் நீதிமன்றம் மனுவை விசாரிக்கும்படி அறிவித்தல் அனுப்பியுள்ளது.
இதேவேளை, சந்தேகநபரான ராஜித சேனாரத்னவிற்கு நாளை (29) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்து விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணைக்கு அமைய நாளை அவர் கட்டாயம் நீதிமன்றில் முன்னிலையாவார் என சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.
மேலும், குறித்த மனுவை செப்டெம்பர் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.















