இலங்கை நேரப்படி நண்பகல் 2.45 மணி வரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800-ஐ தாண்டியுள்ளது. இன்னும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணி நடைபெற்று வருவதால் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் வருத்தம் அளிக்கிறது என இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் “ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் தமது உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு ஆழ்நத இரங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து வித மனிதாபிமான உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.














