• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்காமைக்கு முதலாளிகள் கூறும் காரணங்களை ‘ஏற்கும் அரசாங்கம்’

Nuwara Eliya, Sri Lanka

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்காமைக்கு முதலாளிகள் கூறும் காரணங்களை ‘ஏற்கும் அரசாங்கம்’

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2025/09/12
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, மலையகம்
69 1
A A
0
30
SHARES
1000
VIEWS
Share on FacebookShare on Twitter

இரண்டு நூற்றாண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த கடுமையாக உழைத்து வரும் நாட்டின் தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதி தொடர்ந்து இழுபறி நிலையிலேயே உள்ளது.

பெருந்தோட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, பெருந்தோட்ட மற்றும் சமூக உற்கட்டமைப்பு பிரதி அமைச்சர், சம்பளத்தை அதிகரிக்க முடியாமைக்கு முதலாளிகள் கூறும் காரணங்களை நியாயப்படுத்த முயன்றுள்ளார்.

“உலகச் சந்தையில் இலங்கை தேயிலையின் விலை வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும், தேயிலைக்கு சரியான விலை கிடைப்பதில்லை எனவும், அதேபோல் உற்பத்திக்காக அதிக செலவு மேற்கொள்ளப்படுவதாகவும், அதனைவிட தொழிலாளர்களுக்கு ஏனைய நலன் திட்டங்களுக்கு அவர்கள் அதிகமான பணத்தை செலவு செய்வதாகவும் கூறியிருந்தார்கள். அவர்கள் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது எனக் கூறவில்லை. அவர்கள் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாமைக்கான காரணங்களை தெளிவுபடுத்தியிருந்தார்கள்.” என பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஊடக சந்திப்பை நடத்தி குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை மக்களுக்கு பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அணுகுமுறை தீங்கு விளைவிக்கும் என உலக வங்கி கூறிய அதே நாளில், பிரதி அமைச்சர் பெருந்தோட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களின் வாதங்களை ஏற்றுக்கொண்டுள்ளார்.

அரசாங்கத்தின் இந்த வருடத்திற்கான பாதீட்டில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு ஏற்ப, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை ரூ.1,700 ஆக உயர்த்தும் திட்டம் குறித்து உடன்பாட்டை எட்டுவதற்காக, தற்போதைய அரசாங்கம் செப்டெம்பர் 9 ஆம் திகதி தோட்டங்களை நிர்வகிக்கும் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் ஒரு விசேட கலந்துரையாடலை நடத்தியது.

“பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுத்த நிதி நடவடிக்கைகளால் பெருமளவில் உந்தப்பட்ட, அதிக மறைமுக வரிகள் மற்றும் பொதுத்துறையில் உண்மைச் சம்பளக் குறைப்பு , குடும்பங்களை மோசமாகப் பாதித்துள்ளன” என அதே நாளில் வெளியிடப்பட்ட இலங்கை குறித்த உலக வங்கியின் அண்மைய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட சம்பளத்தை நிர்ணயிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தின் பேச்சாளர் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

“உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட சம்பள அதிகரிப்பிற்கு அரசாங்கம் இதன்போது இணக்கம் தெரிவித்தது. அதற்கான திட்ட வரைபை தமக்கு கையளிக்குமாறு அரசாங்கம் கூறியது. திட்ட வரைபை அடுத்த வாரம் அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளோம். தொழிலாளர்களுக்கு அதிகளவு பணத்தை உழைக்கக்கூடிய வகையிலான திட்ட வரைபை தயாரிப்பது தொடர்பில் கலந்துரையாடப்படும்.”

இந்த விடயம் தொடர்பாக ஒரு மாதத்தில் மற்றொரு கலந்துரையாடல் நடத்தப்படும் எனக் கூறிய பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், கடந்த காலங்களில் பலமுறை கூறியது போல், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ரூ.1,700 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கும் என மீண்டும் ஒருமுறை ஊடக சந்திப்பில் தோட்டத் தொழிலாளர்களுக்கு உறுதியளித்தார்.

வர்த்தமானி

உழைப்புக்கு ஏற்ற ஊதிய உயர்வு கோரி பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை ரூ.1,700 ஆக உயர்த்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பை தொழில் திணைக்களத்தால் வெளியிட்டது.

மே 21, 2024 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில், நாளாந்த குறைந்தபட்ச ஊதியம் 1,350 ரூபாய், உற்பத்தித்திறன் அடிப்படையிலான ஊக்குவிப்பு கொடுப்பனவு 350 ரூபாய் என்ற அடிப்படையில் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாயாக அதிகரிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கு முன்மொழியப்பட்ட ரூ.1,700 நாளாந்த ஊதியத்தை வழங்க அரசாங்கம் தலையிடும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலைவர் அனுர குமார திசாநாயக்க அறிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பையோ அல்லது தோட்டத் தொழிலாளர்கள் சார்பாக ஜனாதிபதி அளித்த வாக்குறுதியையோ அரசாங்கம் இதுவரை செயல்படுத்தத் தவறியுள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர் போதுமானதாக இருந்த ரூ.1,700 என்ற நாளாந்த ஊதியம் இன்றைய பொருளாதார சூழலில் போதுமானதாக இருக்காது என மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆடைத் தொழிற் துறையைச் சேர்ந்தவர்களுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்!

Next Post

Update -நித்திய இளைப்பாறிய அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோவின் இறுதி ஆராதனை தொடர்பான அறிவிப்பு

Related Posts

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!
இலங்கை

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

2026-01-24
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!
இலங்கை

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026-01-24
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!
இலங்கை

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

2026-01-24
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!
இலங்கை

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

2026-01-24
இன்றும் தொடரும் அரச வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு!
இலங்கை

இன்றும் தொடரும் அரச வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு!

2026-01-24
ஆறாம் ஆண்டிற்கான புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு ஆதரவாக நாவலப்பிட்டியில் பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!
இலங்கை

ஆறாம் ஆண்டிற்கான புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு ஆதரவாக நாவலப்பிட்டியில் பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

2026-01-24
Next Post
அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோ நித்திய இளைப்பாறினார்!

Update -நித்திய இளைப்பாறிய அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோவின் இறுதி ஆராதனை தொடர்பான அறிவிப்பு

தேர்தல் கடமைகளுக்காக 50 ,000 பொலிஸார்

10,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில்!

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து விசேட செயலமர்வு!

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து விசேட செயலமர்வு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

0
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

0
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

0
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.