குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைளை தடுப்பதற்கு எதிராக நாடளாவிய ரீதியாக நேற்று (18) நடத்தப்பட்ட சிறப்பு பொலிஸ் நடவடிக்கைகளின் போது மொத்தம் 736 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதேச மட்டத்தில் உள்ள அனைத்து பிராந்திய பொலிஸ் பிரிவுகளிலும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நடவடிக்கைகளின் போது 28,705 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிகமாக, மதுபோதையில் வாகனம் செலுத்தியதற்காக 50 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் 20 பேர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் கூறினர்.














