கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் திங்கட்கிழமை (22) பாகிஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தான் போர் விமானங்கள் திரா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மாட்ரே தாரா கிராமத்தில் எட்டு LS-6 குண்டுகளை வீசி இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
இறந்தவர்கள் அனைவரும் பொதுமக்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் அவர்களின் நிலைமை தெளிவாக இல்லை.
சம்பவ இடத்தின் படங்களும் காணொளிகளும் சிறுவர்கள் உட்பட உயிரிழந்தவர்களின் உடல்கள் கிடப்பதைக் காட்டியது.
இடிபாடுகளுக்கு அடியில் உடல்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
கைபர் பக்துன்க்வாவில் கடந்த காலங்களில் பல பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் அப்பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைபர் பக்துன்க்வா காவல்துறையின் கூற்றுப்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை மாகாணத்தில் 605 பயங்கரவாத சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் குறைந்தது 138 பொதுமக்களும் 79 பாகிஸ்தான் காவல்துறையினரும் கொல்லப்பட்டனர்.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 129 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் ஆறு பாகிஸ்தான் இராணுவம் மற்றும் துணை இராணுவ கூட்டாட்சி பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.
















