நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நெடுந்தீவு அருகே அத்துமீறிய மீன்பிடியில் ஈடடுபட்ட காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டனர்.
இன்று அதிகாலை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இவர்களிடமிருந்து மீன்பிடிக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு படகும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர்கள் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துவரப்பட்டு கடற் படையினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபின்னர் கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகளிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டு யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதவான் இல்லத்தில் இன்று மாலை ஆஜர் படுத்தப்படபோது ஒக்ரோபர் 1 ஆம் திகதிவரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
















