கிளிநொச்சி தர்மபுரம் பகுதியிலுள்ள தனியார் காணி ஒன்றில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த காணியில் நேற்று துப்புரவுப் பணிகளை மேற்கொண்ட போது வெடிக்காத நிலையில் கை குண்டு ஒன்று இருப்பது அவதானிக்கப்பட்டது.
அதனையடுத்து தருமபுரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தர்மபுரம் பொலிஸார் கைக்குண்டை மீட்டுள்ளனர்.
கிளிநொச்சி நீதிமன்ற அனுமதியுடன் அப்பகுதியில் இருந்து கைக்குண்டினை பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுள்ளது.















