இங்கிலாந்தில் காவல்துறை மற்றும் பிற நிறுவனங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் அத்துமீறலைத் தடுக்கத் தவறிவிட்டதாக, அரசியல் காட்சிகளை சேர்ந்த சுற்றுச்சூழல் நிறுவனம் (EA), குற்றம் சுமத்துகின்றது.
இது குறித்து அரசாங்கத்திற்கு கண்டன கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.
அதில், கழிவு குற்றங்களை சுயாதீனமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், தற்போதைய அணுகுமுறை “போதுமானதாக இல்லை” என்றும் இங்கிலாந்து மேல்சபையின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றக் குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இது குறித்து அவர்கள் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
குறித்த கழிவு குற்றங்களை அரசாங்கம் மந்த நிலையில் தடுப்பதாகவும் இந்த வேகம் போதாது எனவும் இதனால் அரசாங்கத்தின் கழிவு முகாமைத்துவ குழு பயனற்றது எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கழிவு குற்றவாளிகளுக்கான தண்டனைகள் போதுமானதாக இல்லை எனவும் எதிர்கால குற்றங்களைத் தடுக்க அவை போதுமானதாக இல்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளது.
சுற்றுச்சூழல், கிராமப்புற மற்றும் உணவு விவகாரங்கள் துறை இந்தப் பிரச்சினையைச் சமாளிப்பதற்கான இலக்குகளை உருவாக்கி வெளியிட வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் நிறுவனம் தெரிவித்துள்ளது.














