ரயிலில் தூங்கிக் கொண்டிருந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தொடர்பில் cctv காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த காணொளியில் உள்ள ஒரு ஆணிடம் விசாரணை மேற்கொண்டால் சம்பவம் தொடர்பான தகவல்கள் கிடைக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ரயிலில் செல்லும்போது உறங்கிக்கொண்டிருந்த குறித்த பெண் விழித்தெழுந்து ரயிலில் ஒரு ஆண் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொள்வதை அறிந்து புலனாய்வு பிரிவுக்கு முறையிட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 23 அம திகதி இடம்பெற்றுள்ள நிலையில் தற்போது அந்த சமபாவம் தொடர்பான விசராணைகள் இடம்பெற்று வருவதுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரை அடையாளம் காணும் எவரும் 61016 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவோ அல்லது 0800 405040 என்ற எண்ணிற்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

















