இங்கிலாந்தில் சமீபத்தில் பாலின மருத்துவமனைகளில் பூப்பெய்தலைத் தடுக்கும் மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுவர்களில் இந்த மருந்துகளின் பயன்பாடு குறித்த முதல் மருத்துவப் பரிசோதனைகளுக்கு கட்டுப்பாட்டாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
கிங்ஸ் கல்லூரி லண்டன் (KCL) தலைமையிலான இந்தப் புதிய சோதனைகள், இந்த மருந்துகளின் ஆபத்துகள் மற்றும் நன்மைகள் இரண்டையும் ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
குறிப்பாக வைத்தியர் Hilary Cass) ஹிலாரி காஸ் தலைமையிலான முந்தைய ஆய்வு, ஹார்மோன் சிகிச்சைகளுக்கான ஆதாரங்கள் பலவீனமாக இருப்பதாகக் கண்டறிந்த பின்னர் இந்த சோதனைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இதேவேளை, சுமார் 250 குழந்தைகளை சேர்த்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ள “பாத்வேஸ்” எனப்படும் இந்த சோதனையானது, மருந்து மற்றும் மருத்துவமற்ற கவனிப்பைப் பெறும் குழுவுடன், மருத்துவமற்ற கவனிப்பை மட்டும் பெறும் குழுவை ஒப்பிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு அவர்களைப் பின்தொடரும்.
இந்த மருந்துகள் குறித்து சில மருத்துவர் குழுக்கள் கவலைகள் தெரிவித்திருந்தாலும், பாலின மாற்று அறுவை சிகிச்சை ஆதரவு குழுக்கள், பாலின உறுதிப்படுத்தல் சிகிச்சையின் நன்மைகளை மருத்துவ அமைப்பு குறைத்து மதிப்பிடுவதாக வாதிடுகின்றன.
மேலும் இந்த ஆய்வு முடிவுகளைப் பெற நான்கு ஆண்டுகள் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















