(Sheffield) ஷெஃபீல்ட் பகுதியில் ஒரு 16 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுவன், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக இங்கிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 5.20 மணியளவில் இங்கிலாந்து சாலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
சவுத் யார்க்ஷயர் காவல்துறை குற்றவாளிகளை அடையாளம் காண தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மூத்த புலனாய்வு அதிகாரி Emma Knight, இது ஒரு கொடுமையான சம்பவம் என்று கூறியதோடு, பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தகவல் அளிக்குமாறு வலியுறுத்துகிறார்.
இந்தத் தாக்குதலுக்கு வழிவகுத்த சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு, பொறுப்பானவர்களைக் கண்டறிய அதிகாரிகள் அயராது உழைப்பதாகவும் அவர் உறுதி அளிக்கிறார்.
சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள இங்கிலாந்து சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளதாகவும் , மேலும் அப்பகுதியில் காவல்துறையின் ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.



















