அயோத்தி ராமர் கோவிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் இன்று பிரதமர் மோடி கொடியேற்றினார்.
ராமர் கோவிலில் பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர். எஸ். எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் வழிபாடு நடத்தினர்.
அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
அயோத்தி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.
அயோத்தியில் ராமர் கோவிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது 30 அடி உயர கம்பம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் கொடி ஏற்றுதல் விழா காலை 11:52 மணி முதல் பிற்பகல் 12:35 மணி வரை சுப முகூர்த்த நேரத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
ராமர் பிறந்த சூரிய குலத்தை குறிக்கும் வகையில் சூரிய சின்னம், மையத்தில் ஓம் மற்றும் மந்தாரை மரம் பொறிக்கப்பட்ட காவிக்கொடி உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.















